5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: கேப்டனுடன் கடும் வாக்குவாதம்.. போட்டிக்கு நடுவே வெளியேறிய அல்சாரி ஜோசப்..!

Alzarri Joseph: வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் இன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது விக்கெட் மெய்டன் ஓவரை வீசியபிறகு கோபத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Watch Video: கேப்டனுடன் கடும் வாக்குவாதம்.. போட்டிக்கு நடுவே வெளியேறிய அல்சாரி ஜோசப்..!
அல்சாரி ஜோசப்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 07 Nov 2024 16:05 PM

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என முன்னிலை பெற்று தொடரையும் வென்றது. இப்போட்டியின் நடுவே, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் இன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது விக்கெட் மெய்டன் ஓவரை வீசியபிறகு கோபத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

ALSO READ: IND A vs AUS A: என்ன ஆச்சு கே.எல். ராகுல்.. ஆஸி-ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சொதப்பல்!

வாக்குவாதம்:

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வீரர்கள் கோபப்படுவது சாதாரண விஷயம். ஆனால், போட்டிக்கு நடுவே கோபத்தில் களத்தில் இருந்து வெளியேறுவது அரிதாகவே நடக்கும் ஒரு நிகழ்வாகும். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்க்கும், கேப்டன் ஷாய் ஹோப்க்கும் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. இந்த காட்சியை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போட்டிக்கு முன்பு, கேப்டன் ஷாய் ஹோப் அமைத்த பீல்டிங்கில் அல்சாரி ஜோசப் அதிருப்தி அடைந்ததாகபும், அதை மாற்றுமாறு கேப்டனிடன் கேட்டபோது, அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது அல்சாரி ஜோசப்பை கோபப்படுத்தியதாக தெரிகிறது.

இங்கிலாந்து இன்னிங்ஸின் நான்காவது ஓவரின்போது கேப்டன் ஷாய் ஹோப் அமைத்த பீல்டிங் ஜோசப்புக்கு பிடிக்கவில்லை. இதனால், ஸ்லிப் பீல்டரை மாற்ற சொல்லியும், ஷாய் ஹோப் மாற்றவில்லை. இதையடுத்து, அல்சாரி ஜோசப் ஆவேசமாக பந்து வீச தொடங்கினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் அவர் வீசிய பவுண்சரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் காக்ஸ் பேட்டில் பட்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்பின் கைகளில் சிக்கினார்.

இதை தொடர்ந்து, காக்ஸ் வெளியேற்றிய பிறகும், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப், கேப்டன் ஷாய் ஹோப்புடன் களத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, தான் வீசிய ஓவரில் ரன் எதுவும் விட்டுகொடுக்காமல் மெய்டனாக வீசிவிட்டு, வேகமாக களத்தில் இருந்து வெளியேறினார். அல்சாரி தான் வீசிய ஓவரில் காக்ஸை அவுட் செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறியதால், அடுத்த ஓவர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் மட்டுமே பீல்டிங் செய்தனர். இதையடுத்து, அல்சாரி ஜோசப்புக்கு பதிலாக ரொமாரியோ ஷெப்பர்ட் பீல்டிங் செய்ய களத்திற்கு வந்தார்.

போட்டியில் நடந்தது என்ன..?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் 8 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சால்ட் 74 ரன்களும், மோஷ்லி 57 ரன்களும் எடுத்திருந்தனர்.

ALSO READ: WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 102 ரன்களும், கெஸி கார்ட்டி 128 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

Latest News