Women T20 World Cup: 8 ஆண்டுகளில் முதல் முறை.. அரையிறுதிக்கு முன்னேறாமல் போன இந்திய அணி!
Women's T20 WC: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நம்பியே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. குரூப் ஏ இலிருந்து ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது.
2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியின் பயணம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறாதது இதுவே முதல்முறை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. ஆனால், குரூப் ஏ கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.
எப்படி வெளியேறியது இந்திய அணி..?
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நம்பியே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. குரூப் ஏ இலிருந்து ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. அதேநேரத்தில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டாவது இடத்திற்கான போட்டி இருந்தது.
New Zealand Qualifies for T20 World Cup 2024 Semifinals After 8 Years, Shattering India’s Dreams in a Stunning Upset.#iccwomenst20worldcup2024 #NZvsPAK #cricket #cricketnews pic.twitter.com/hVJgPYxZAQ
— Hit Wicket (@hitwicket0811) October 14, 2024
இந்தியா இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்த போட்டிக்கு முன், இந்திய மகளிர் அணி நிகர ரன் விகிதம் நியூசிலாந்தை விட சிறப்பாக இருந்தது. நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்திருந்தால், பாகிஸ்தானும், இந்தியாவும் 4 புள்ளிகளை பெற்றிருக்கும். அதேவகையில், இரண்டாவது அரையிறுதி நிகர ரன் ரேட் அடிப்படையில் என்பதால், இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும். இருப்பினும், நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 4 போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
Pakistan dropped 8 catches In yesterday’s match.#NZvsPAKpic.twitter.com/ftaVAkiw5j
— HomeLander_Raj (@RajHomelander) October 15, 2024
கடந்த மூன்று ஐசிசி டி20 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறி வருகிறது. மேலும், கடந்த 2020ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது. இந்த முறை எப்படியாவது இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான அணி அரையிறுதியில் இருந்து வெளியேறி ஏமாற்றத்தை அளித்தது.
நேற்றைய போட்டியில் நடந்தது என்ன..?
டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் 56 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி பதிவு செய்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது. 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸூக்கு அணிக்கு எதிரான் போட்டியில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து, வங்கதேசம் தனது பெயரில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 10.4 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றிருந்தால், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும். நேற்று நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் மகளிர் அணி 8 கேட்சுகளை மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் பேட்டிங்கின்போது 8 வீராங்கனைகள் இரட்டை இலக்கை தாண்டவில்லை. அதில், 4 வீராங்கனைகள் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தனர்.