5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Womens T20 Asia Cup: மகளிர் ஆசிய கோப்பை போட்டியை காண இலவச அனுமதி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

சமீப காலமாக ஆண்கள் கிரிக்கெட்டை போலவே, மகளிர் கிரிக்கெட்டும் இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மகளிர் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதே போல், மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Womens T20 Asia Cup: மகளிர் ஆசிய கோப்பை போட்டியை காண இலவச அனுமதி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி
intern
Tamil TV9 | Published: 17 Jul 2024 18:46 PM

சர்வதேச அளவில் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றே, தற்போது மகளிருக்கான கிரிக்கெட் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டி20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களில் பெண்களும் முத்திரை பதித்து வருகின்றனர். பெண்கள் உலக கோப்பை தொடர், ஆசிய கோப்பை போன்ற தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற 8 சீசன்களில், இந்தியா 7 முறையும், வங்கதேச அணி 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிலையில் தான் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வரும் 19 ஆம் தேதி பிரம்மாண்டமாக இலங்கையின் தம்புல்லாவில் தொடங்குகிறது.

Also  Read: Dhammika Niroshana: இலங்கை முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

இந்த தொடரில் வங்கதேசம், இந்தியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் என்று மொத்தமாக 8 அணிகள் விளையாட உள்ளது. இந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து குரூப் சுற்று போட்டிகளில் மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26-ம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அணிகள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி 19 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Also Read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?

இந்த மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. தொலைப்பேசியில் பார்க்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்டீரீமிங் செய்யப்படுகிறது. இந்த நிலையில், மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைதளத்தில் அறிவித்துள்ளது.

Latest News