India vs New Zealand: சொதப்பிய பேட்டிங்.. உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி!
Women's T20 World Cup 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை விட 19 ஓவர்களில் 102 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பேட்ஸ் மற்றும் பிலிம்மர் முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 67 ரன்களை குவித்தனர். அதன்பின் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைனும் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உதவியுடன் 57 ரன்கள் குவிக்க, இவருக்கு உறுதுணையாக ஜார்ஜியா பிலிம்மருக்கு 34 ரன்கள் எடுத்தனர்.
இதன் காரணமாக, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் தாக்கூர் 2 விக்கெட்களும், அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா சோபானா தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
Innings Break!
New Zealand post 160/4 in the first innings.
2⃣ wickets for Renuka Singh Thakur
A wicket each for Arundhati Reddy & Asha SobhanaStay tuned for #TeamIndia‘s chase.
Scorecard ▶️ https://t.co/XXH8OT5MsK#T20WorldCup | #INDvNZ | #WomenInBlue pic.twitter.com/65P4YU72V9
— BCCI Women (@BCCIWomen) October 4, 2024
பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி:
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழந்து தடுமாற தொடங்கியது. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை தந்தார். இதனால் இந்திய அணி 11 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு, ஸ்மிருந்தி மந்தனாவுடன் இணைந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் வேட்டையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
Our girls may lose it by an innings! #IndvsNZ pic.twitter.com/oG0Pa7jUwO
— A13 (@arjun_pandiit) October 4, 2024
ஸ்மிருதி மந்தனா 12 ரன்களுடனும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தது. தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெறும் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 2 வது விக்கெட்டை இழந்தது.
அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 4 பேட்ஸ்மேன்களை இழந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 பந்துகளில் 13 ரன்கள் வெளியேற இந்திய அணியின் ஸ்கோர் 63 ரன்களில் 4 விக்கெட்களை இழந்தது.
ALSO READ: Acne Tips: 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருகிறதா? இவை காரணங்களாக இருக்கலாம்!
தொடர்ந்து, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை விட 19 ஓவர்களில் 102 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Team India Lost their First match against New Zealand..#INDvsNZ #WomenInBlue #T20WorldCup #TeamIndia pic.twitter.com/fWAr4bJFdE
— HomeLander_Raj (@RajHomelander) October 4, 2024
இந்திய அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த 15 ரன்களே ஆகும்.
நியூசிலாந்து சார்பில் ரோஸ்மெரி 4 விக்கெட்களும், லீ டஹூ 3 விக்கெட்களும், ஈடன் கார்சன் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.