கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்… உற்சாக வரவேற்பு!
World Chess Champion Gukesh: சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தது. சென்னை விமான நிலையத்தில் சாம்பியன் குகேஷுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலாயளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ், ”எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு, அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நான் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எனக்காக ஆதரவாக இருப்பதை என்பதை என்னால் பார்க்க முடிந்தது. நீங்கள் அற்புதமானவர்கள். நீங்கள் எனக்கு மிகவும் ஆற்றல் கொடுத்தீர்கள்” என்றார்.
சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்
கடந்த நவம்பர் 25ஆம் தேதி சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவைச் சேர்ந்த டிங் லிரென் இந்த போட்டியில் களம் கண்டார். நடப்பாண்டில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியனான தன் மூலம் உலக சாம்பியன் பட்டத்துக்காக லிரெனுடன் மோதும் சேலஞ்சர் வாய்ப்பை குகேஷ் பெற்றார்.
மொத்தம் 14 சற்றுகள் கொண்ட இநத் போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டுபவர் சாம்பியனாவார். முதல் சுற்றில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் என்பதை லிரென் நிலைநாட்டினார். 2வது சுற்றில் மீண்டும் டிரா செய்த குகேஷ், 3வது சுற்றில் வென்று தான் ஒரு தகுதியான சேலஞ்சர் என்று நிரூபித்தார்.
தொடர்ந்து வந்த சுற்றுகளில் இருவருமே சமபலம் காட்டியதால் 4 முதல் 10 வரையிலான 7 சுற்றுகள் அடுத்தடுத்து டிராவில் முடிந்தது. இந்த நிலையில், 11வது சுற்றில் வென்ற குகேஷ், சற்று விறுவிறுப்பு கூட்டினார்.
Also Read : 45 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு ஒருநாள் போட்டிகளில் கிடைக்காத வெற்றி.. இந்திய அணி மோசமான சாதனை!
வரலாறு படைத்த குகேஷ்
ஆனால் லிரெனா 12வது சுற்றை கைப்பற்றி, போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார். 13வது சுற்று டிராவில் முடிய, 14வது சுற்றில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில் 58 நகர்த்தலில் நடப்பு சாம்பியன் லிரெனை வீழ்த்தி வெற்றியுடன் முடிவுக்கு கொண்டு வந்தார் குகேஷ். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ்க்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#WATCH | Chennai, Tamil Nadu: World Chess Champion #GukeshD says, “I am very glad to be here. I could see the support that and what it means to India…You guys are amazing. You gave me so much energy…” pic.twitter.com/iuFXDiLcjx
— ANI (@ANI) December 16, 2024
இதன் மூலம் சாம்பியன்ஷிப் வரலாற்றில் வாகை சூடிய இளம் போட்டியாளர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதற்கு முன் ரஷியாவை சேர்ந்த கேரி கேஸ்பரோவ் 1985ஆம் ஆண்டு தனது 22 வயதில் சாம்பியானானதே சாதனை இருந்த நிலையில், குகேஷ் அதை முறியடித்துள்ளார். 18வது உலக சாம்பியஷிப்பில் 18 வயது குகேஷ் வாகை சூடினார்.
Also Read : முடிந்த WPL மினி ஏலம்.. எடுக்கப்பட்ட 19 பிளேயர்ஸ்.. அதிக விலைக்கு போன தமிழக வீராங்கனை..!
சாம்பியனான அவருக்கு ரூ.11 கோடி வழங்கப்பட்டது. 2ஆம் இடம் பிடித்த டிங்க் லிரெனுக்கு ரூ.10.13 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. குகேஷுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்.