ஒரு வருடம் ஐஸ்கிரீம் சாப்பிடாத சாம்பியன் குகேஷ்.. அவரே சொன்ன காரணம்!
World Chess Champion Gukesh: இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு (FIDE) குகேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவின் இளம் செஸ் நட்சத்தரம் குகேஷ், வரலாறு படைத்து உலகின் இளம் செஸ் சாம்பியனாகி உள்ளார். 18 வயதான இவர், 18வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பினும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு (FIDE) குகேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக குகேஷ் ஒரு வருடம் முழுவதும் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருந்ததாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், “நான் ஒரு வருடமாக ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. செஸ் போட்டிக்காக இந்த முடிவை எடுத்தேன்.
ஐஸ்கிரீம் சாப்பிடாத சாம்பியன் குகேஷ்
தற்போது ஐஸ்கிரீம் சாப்பிட முயற்சி செய்வேன்” என்று கூறினார். அதே நேரத்தில் சாம்பியன்ஷிப்பின் போது தனக்குப் பிடித்த தென்னிந்திய உணவுகளை வழங்கிய சிங்கப்பூர் சமையல்காரருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”எனக்கு, என் பெற்றோர்கள் தான் எல்லாமே.
நான் செஸ் விளையாடத் தொடங்கியபோது, குடும்பமாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. என் பெற்றோர்கள் நிறைய தியாகம் செய்தார்கள், குறிப்பாக நிதி சார்ந்த கஷ்டங்களை எதிர்கொண்டார்கள். இன்று, நாங்கள் ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறோம். அவர்கள் செய்யதது அதிகம். நான் இன்னும் செஸ் விளையாட்டை விரும்பும் குழந்தை.
நான் முதலில் என் செஸ் பலகையை பெற்றபோது, என்னிடம் இருந்த மிகச்சிறந்த பொருளாக இருந்தது. சதுரங்கத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு தவறு செய்வீர்கள். மிகச்சிறந்த வீரர்கள் கூட தவறு செய்கிறார்கள்.
Also Read : கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்… உற்சாக வரவேற்பு!
அவரே பகிர்ந்த காரணம்
ஒவ்வொரு முறையும் நான் விளையாடும்போது, நான் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். அது என்னைக் கவர்ந்த செயல்முறையாகும். நான் ஒரு அழகான விளையாட்டை இழந்தால் நான் வருத்தப்படுவேன். இலக்கு எப்பொழுதும் முக்கியமானது” என்றார். அண்மையில் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு குகேஷ் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது நண்பர்கள் நடனம் ஆடும் போது நான் எப்போது ஒரு மூலையில் அமர்ந்து இருப்பேன். ஆனால் இப்போது அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நான் மீண்டும் நடனம் ஆட வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகிறார்கள். நான் செஸ் எப்போது விளையாடுவேன். ஏனென்றால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
Also Read : 45 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு ஒருநாள் போட்டிகளில் கிடைக்காத வெற்றி.. இந்திய அணி மோசமான சாதனை!
18வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற குகேஷுக்கு ரூ.11.60 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும், 18 வயதில் வென்றுள்ள அவர், உலகளவில் குறைந்த வயதில் செஸ் சாம்பியன் ஆன பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக இந்தியாவின் விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதற்கு பின் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.