5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

World Chess Championship 2024: 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம்.. சீன வீரரை வீழ்த்தி சாதனை படைத்த குகேஷ்..!

Gukesh Dommaraju: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதே ஆன குகேஷ். இந்த வெற்றியின் மூலம் விஸ்வநாதன் ஆனந்தின் எலைட் கிளப்பில் தொம்மராஜூ குகேஷ் நுழைந்துள்ளார்.

World Chess Championship 2024: 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம்.. சீன வீரரை வீழ்த்தி சாதனை படைத்த குகேஷ்..!
குகேஷ் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 12 Dec 2024 19:31 PM

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். 14வது சுற்றில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரென்னை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதே ஆன குகேஷ். இந்த வெற்றியின் மூலம் விஸ்வநாதன் ஆனந்தின் எலைட் கிளப்பில் தொம்மராஜூ குகேஷ் நுழைந்துள்ளார். அதன்படி, இந்தியாவிலிருந்து உலக சாம்பியன் ஆன இரண்டாவது செஸ் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் மட்டுமல்லாமல், இந்த ஆண்டு குகேஷ் கேண்டிடேட்ஸ் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்டவைகளில் தங்கமும் வென்றார்.

செஸ் உலகில் பரபரப்பு:

18 வயதே ஆன குகேஷ், தனது செஸ் கேரியலில் பலமுறை உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இளம் வயதிலேயே பல சாதனைகளை தன் பெயரில் பதிவு செய்துள்ளார். முன்னதாக, தனது 12 வயதில் 7 மாதங்கள், 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். மேலும், உலகின் இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற அடையாளத்தை பெற 17 நாட்களில் தவறவிட்டார். மேலும், கடந்த ஆண்டு 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி, கடந்த 36 ஆண்டுகளில் முதல்முறையாக தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் குகேஷ்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:


18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “ 18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷூக்கு வாழ்த்துகள்.

உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது.

உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!” என தெரிவித்திருந்தார்.

Latest News