WPL 2025 Auction: முடிந்த WPL மினி ஏலம்.. எடுக்கப்பட்ட 19 பிளேயர்ஸ்.. அதிக விலைக்கு போன தமிழக வீராங்கனை..!
G Kamalini: தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதான விக்கெட் கீப்பர் கமிலினி, தனது 12 வயதில் இருந்து கிரிக்கெட் மூலம் பிரபலமடைய தொடங்கியது. தனது கடினமாக உழைப்பால் 19 வயதுக்குட்டப்பட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கி 8 போட்டிகளில் 311 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பிறகு, தற்போது பெண்கள் பிரீமியர் லீக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் ஏராளமானோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இம்முறை ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 வீரர்களில் 91 பேர் இந்தியர்களும் 29 பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆவர். அதிகபட்சமாக 19 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட இருந்தனர். ஏனெனில், 5 அணிகள் உட்பட 19 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இதில் 5 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு சொந்தமாக இருந்தது, நீ, நான் என ஒவ்வொரு அணிகளும் போட்டிப்போட்டு தங்கள் அணிக்கு வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான டியாண்ட்ரா டாட்டினை அதிகபட்சமாக ரூ. 1.7 கோடி பந்தயத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து, அன்கேப்டு இந்திய வீராங்கனை ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.60 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்தநிலையில், பெண்கள் பிரீமியர் லீக் 2025 மினி ஏலத்தில் எந்த வீராங்கனைகளை எவ்வளவு தொகைக்கு எந்த அணிகள் ஏலம் எடுத்தது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஏலத்தில் வாங்கப்பட்ட 19 வீரர்கள்:
- சிம்ரன் ஷேக் – குஜராத் ஜெயண்ட்ஸ் – ரூ.1.90 கோடி
- டியாண்ட்ரா டாட்டின் (வெஸ்ட் இண்டீஸ்) – குஜராத் ஜெயண்ட்ஸ் – ரூ. 1.70 கோடி
- ஜி கமலினி – மும்பை இந்தியன்ஸ் – ரூ 1.60 கோடி
- பிரேமா ராவத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 1.20 கோடி
- என் சர்னானி – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 55 லட்சம்
- நாடின் டி கிளர்க் (தென்னாப்பிரிக்கா) – மும்பை இந்தியன்ஸ் – ரூ.30 லட்சம்
- அலனா கிங் (ஆஸ்திரேலியா) – உ.பி வாரியர்ஸ் – ரூ.30 லட்சம்
- டேனியல் கிப்சன் (இங்கிலாந்து) – குஜராத் ஜெயண்ட்ஸ் – ரூ.30 லட்சம்
- அக்ஷிதா மகேஸ்வரி – மும்பை இந்தியன்ஸ் – 20 லட்சம்
- நந்தினி காஷ்யப் – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ.10 லட்சம்
- ஆருஷி கோயல் – உ.பி வாரியர்ஸ் – ரூ.10 லட்சம்
- கிராந்தி கவுர் – உ.பி வாரியர்ஸ் – ரூ.10 லட்சம்
- சமஸ்கிருதி குப்தா – மும்பை இந்தியன்ஸ் – ரூ.10 லட்சம்
- ஜோஷிதா விஜே – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 10 லட்சம்
- சாரா பிரைஸ் (ஸ்காட்லாந்து) – டெல்லி கேபிடல்ஸ் – ரூ.10 லட்சம்
- ராகவி பிஸ்ட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 10 லட்சம்
- ஜாகர்வி பவார் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 10 லட்சம்
- நிக்கி பிரசாத் – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 10 லட்சம்
- பிரகாஷிகா நாயக் – குஜராத் ஜெயண்ட்ஸ் – ரூ.10 லட்சம்
தமிழ்நாடு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கமலினியின் பெயர் ஏலத்திற்கு வந்தபோது, அவரை முதலில் ஏலம் எடுக்க முயற்சி செய்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதை தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கமலினியை வாங்க ஏலத்தில் களமிறங்கியது. இதனால் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சிறுது நேரத்தில் கமலினியின் விலை ரூ. 1 கோடியை கடந்தது. இருப்பினும், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விட்டுக்கொடுக்காமல் ஏலத்தில் போட்டி போட்டனர். இறுதியாக தமிழக வீராங்கனை கமலினியை 1.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.
ALSO READ: IND vs AUS: மழை இல்லாமல் முடிந்த 2வது நாள்.. அதிரடியாக ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியா.. பும்ரா ஆறுதல்!
யார் இந்த கமலின்..?
WOW!! 😮
Young wicket-keeper G Kamalini is now part of the Mumbai Indians! 🤝
INR 1.60 Crore for the 16-year old 🔨#TATAWPLAuction | #TATAWPL | @mipaltan pic.twitter.com/PzIw3ZFDrj
— Women’s Premier League (WPL) (@wplt20) December 15, 2024
தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதான விக்கெட் கீப்பர் கமிலினி, தனது 12 வயதில் இருந்து கிரிக்கெட் மூலம் பிரபலமடைய தொடங்கியது. தனது கடினமாக உழைப்பால் 19 வயதுக்குட்டப்பட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கி 8 போட்டிகளில் 311 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 19 வயதுக்குட்டப்பட்ட மகளிர் டி20 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதன்காரணமாகவே, மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிப்போட்டு ஏலத்தில் எடுத்தது.