5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Praggnanandhaa: குருவுக்கு எதிரான காலிறுதி போர்.. விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

Viswanathan Anand: வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி (ஆர்மெக்கெடோன்) ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடன் விளையாடினர். இதில், பிரக்ஞானந்தா காலிறுதியில் 5 முறை உலக சாம்பியனும், அவரது வழிகாட்டியுமான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 17 Oct 2024 19:15 PM
லண்டனில் நடந்த உலக செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தனது வழிகாட்டியும், 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தை எதிர்கொண்டார். இருவரும் கிளாசிக்கல் விளையாட்டுகளில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.

1 / 6
பிரக்ஞானந்தா மற்றும் விஸ்வநாதன் இடையிலான முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் களம் இறங்கினார். அப்போது, விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடன் விளையாடி ஆட்டத்தை சமன் செய்தார்.

2 / 6
இரண்டாவது ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் டிபென்ஸூக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதேநேரத்தில், பிரக்ஞானந்தா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், இந்த போட்டியும் டிராவை நோக்கி நகர்ந்துவிட்டது.

3 / 6
வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி (ஆர்மெக்கெடோன்) ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடன் விளையாடினர். இதில், பிரக்ஞானந்தா காலிறுதியில் உலக சாம்பியனும், அவரது வழிகாட்டியுமான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

4 / 6
விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அரையிறுதி சகநாட்டவரான அர்ஜூன் எரிகைசியை எதிர்கொண்டார். இந்த அரையிறுதி போட்டியில் அர்ஜூன் எரிகைசியுடன் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

5 / 6
அர்ஜூன் எரிகைசி மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான அரையிறுதி போட்டியில் முதல் ஆட்டத்தில் எரிகைசி வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இருவருக்கும் இடையேயான இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, அர்ஜூன் 1.5 - 0.5 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக செஸ் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அர்ஜூன் எரிகைசி.

6 / 6
Latest Stories