5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wriddhiman Saha Birthday: ரோஹித் காயத்தால் அறிமுக வாய்ப்பு.. இந்திய அணியில் தனக்கென ஒரு இடம்.. விருத்திமான் சாஹாவின் பயணம்!

Wriddhiman Saha: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான விருத்திமான் சாஹா, இரண்டாவது இன்னிங்ஸில் 101 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் சாஹா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

Wriddhiman Saha Birthday: ரோஹித் காயத்தால் அறிமுக வாய்ப்பு.. இந்திய அணியில் தனக்கென ஒரு இடம்.. விருத்திமான் சாஹாவின் பயணம்!
விருத்திமான் சாஹா (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Oct 2024 11:08 AM

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1984ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சாஹா பிறந்தார். மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து நீண்ட காலம் விளையாடினார். சிறு வயதில் சாஹா தனது கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சாளராக தொடங்கியதாகவும், பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின்படி விக்கெட் கீப்பங்கில் முயற்சி செய்ய தொடங்கியுள்ளார். சிறிது நாளில் சாஹா விக்கெட் கீப்பிங்கில் பட்டையை கிளப்ப, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வர தொடங்கினார்.

ALSO READ: ZIM vs GM: டி20 வரலாற்றில் அதிக ரன்கள்.. சாதனைப் படைத்த ஜிம்பாப்வே அணி!

விருத்திமான் சாஹா அறிமுக கதை:

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விருத்திமான் சாஹா அறிமுகம் ஆன கதை மிகவும் சுவாரஸ்யமானது. கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லட்சுமணுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது லட்சுமணுக்கு பதிலாக ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்புகள் வலுவாக இருந்தன. ஆனால் பயிற்சியின்போது, ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்படவே சாஹாவுக்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான விருத்திமான் சாஹா, இரண்டாவது இன்னிங்ஸில் 101 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் சாஹா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சில முக்கியமான இன்னிங்ஸ்களை விருத்திமான் சாஹா விளையாடியுள்ளார். இந்தியாவிலும், ஆசியாவிற்கு வெளியேயும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆவார். தற்போது, இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் பெயரும் இடம் பெற்றுள்ளது.

சாஹா சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

விருத்திமான் சாஹா இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் 29.41 சராசரியில் 1353 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்களும் அடங்கும். ஒரு விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளில் சாஹா, 92 கேட்சுகள் மற்றும் 12 ஸ்டம்பிங் செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகளை எடுத்த சாதனையை விருத்திமான் சாஹா படைத்துள்ளார். இதுதவிர, சாஹா 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் களம் இறங்கி, 41 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் வாழ்க்கை:

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடக்க பதிப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விருத்திமான் சாஹா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவரை 133 ஐபிஎல் போட்டிகளில் 24.53 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 8 அரை சதம் உள்பட 2,110 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2024ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 115 ரன்கள் குவித்தார். தற்போது விருத்திமான் சாஹா ஐபிஎல் 2022ம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல்.. சூப்பரான அதிரசம் செய்வது எப்படி..?

விருத்திமான் சாஹா குடும்ப வாழ்க்கை:

கடந்த 2011ம் ஆண்டு விருத்திமான் சாஹா தேபாரதி மித்ரா என்ற பெண்ணை 4 ஆண்டு காத வாழ்க்கைக்கு பிறகு திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Latest News