WTC Points Table: நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி.. சரிவை சந்தித்த இந்திய அணி..! - Tamil News | WTC Points Table: team india remains at the top and New Zealand moves to No.4 position | TV9 Tamil

WTC Points Table: நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி.. சரிவை சந்தித்த இந்திய அணி..!

India vs New Zealand: பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டிக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்த இடத்தில், இலங்கை அணி 55.56 வெற்றி சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

WTC Points Table: நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி.. சரிவை சந்தித்த இந்திய அணி..!

இந்திய அணி (Image: PTI)

Published: 

20 Oct 2024 14:50 PM

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அதிர்ச்சியை கொடுத்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 460 ரன்கள் குவித்து 106 ரன்கள் முன்னிலை பெற்றது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ: IND vs NZ 1st Test: முடிவுக்கு வந்த 36 ஆண்டுகால வறட்சி.. இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்த நியூசிலாந்து!

WTC 2023-25ல் இந்திய அணிக்கு 3வது தோல்வி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்தியா பெற்ற மூன்றாவது டெஸ்ட் தோல்வி இதுவாகும். முன்னதாக, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தலா ஒரு தோல்வியை இந்திய அணி சந்தித்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை தரவில்லை என்றால், புள்ளிகள் அட்டவணையில் சதவீத புள்ளிகளில் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

வெற்றி சதவீத புள்ளிகளை இழந்த இந்திய அணி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய அணி 74.24 என்ற சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது, இந்திய அணியின் வெற்றி சதவீத புள்ளி 68.06 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்திய அணி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அனி 62.50 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டிக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்த இடத்தில், இலங்கை அணி 55.56 வெற்றி சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ALSO READ: BCCI vs PCB: இந்திய அணி வந்தா மட்டும் போதும்.. ஸ்பெஷல் சலுகையை தரும் பாகிஸ்தான்..!

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற, இந்திய அணிக்கு 4 வெற்றிகள் மற்றும் இரண்டு டிரா தேவையாக இருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றிருந்தால் அழுத்தம் இருந்திருக்காது. இப்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 2 வெற்றி, 2 டிரா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த 7 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே விளையாட உள்ளது.

பாகிஸ்தான் அணி எந்த இடத்தில் உள்ளது..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி 25.93 வெற்றி சதவீதத்துடன் 8வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.52 வெற்றி சதவீதத்துடன் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் வெற்றி சதவீதம் முறையே 38.89 மற்றும் 34.38 உடன் 6வது மற்றும் 7வது இடத்தில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2025ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்

 

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?