WTC Final: எளிதாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் இந்தியா.. பயத்தில் பலமிக்க ஆஸ்திரேலியா..!
India vs Australia: இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 4-1, 3-1 அல்லது 3-2 என்ற கணக்கில் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலம் இந்திய அணியை முந்திச் சென்று இறுதிப் போட்டிக்குள் ஆஸ்திரேலிய அணி நுழையும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான இந்திய கிரிக்கெட் அணியின் பாதை தற்போது சீராகியுள்ளது. இதற்கு காரணம், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணியின் வெற்றியே காரணம். அதாவது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இவ்விரு அணிகளின் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகரித்துள்ளது.
South Africa moved 2nd position in world test championship 🏆 @BCCI @CricketAus #worldtestchampionship pic.twitter.com/vt7j3rSZLo
— Kapuriya0 (@kapuriy1) December 1, 2024
அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0, 4-0, 4-1, அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். அதேநேரத்தில், இந்திய அணி மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் வெற்றொ பெற்றால், ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு செல்லும். இந்த நேரத்தில் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இலங்கை அணியும் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் இந்திய அணியை முந்தி முதலிடத்தை தொட முடியாது.
ALSO READ: Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?
இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் முறை பின்வருமாறு:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றால், இந்திய அணி 67% புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி சதவீதம் 65.79 புள்ளிகளை பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றாலும் 63% புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
- இங்கிலாந்துக்கு எதிராக இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாலும் 62% புள்ளிகள் மட்டுமே பெறும்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் 61.53% புள்ளிகளை மட்டுமே பெறும்.
- அந்தவகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 5-0, 4-0, 4-1, அல்லது 3-0 என்ற கணக்கில் எப்படி கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடும்.
ஏனென்றால், அடுத்த அனைத்து போட்டிகளிலும் இலங்கை, நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் இந்தியாவை விட அதிக புள்ளிகள் கிடைக்காது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தால் மட்டுமே இந்த இரண்டு அணிகளுக்கு இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு பெறும். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு:
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழையும்.
Which 2️⃣ teams will qualify for the WTC final? 🏆#India #Australia #SriLanka #SouthAfrica #WTCfinal #WorldTestChampionship #CricketTwitter pic.twitter.com/PPvxgsccjH
— InsideSport (@InsideSportIND) December 2, 2024
இந்திய அணி 5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகும்.
ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்புள்ளதா..?
இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 4-1, 3-1 அல்லது 3-2 என்ற கணக்கில் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலம் இந்திய அணியை முந்திச் சென்று இறுதிப் போட்டிக்குள் ஆஸ்திரேலிய அணி நுழையும். எனவே பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமானது.