Cricket Year Ender: இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் தந்த 2024.. 3 வடிவங்களிலும் படைக்கப்பட்ட சாதனைகள்!
Year Ender 2024: இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்கள் என மூன்றிலும் இந்தாண்டு என்னென்ன சாதனைகளை படைத்தது உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
நடைபெற்று வரும் 2024ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே அமைந்தது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பல பெரிய மற்றும் முக்கியமான சாதனைகளை படைத்துள்ளது. அதில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது, ஐசிவி தரவரிசையில் முதலிடம் பிடித்தது மட்டுமின்றி, பல சாதனைகளையும் குவித்தது. அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்கள் என மூன்றிலும் இந்தாண்டு என்னென்ன சாதனைகளை படைத்தது உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?
17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை:
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய இளம் அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பிறகு, 2வது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய அணி 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
The celebrations have begun in Barbados 🥳
A round of applause for the ICC Men’s T20 World Cup 2024 winning side – Team INDIA 🇮🇳🙌#T20WorldCup | #TeamIndia | #SAvIND pic.twitter.com/OElawo7Xha
— BCCI (@BCCI) June 29, 2024
ஐசிசி தரவரிசையில் மூன்று வடிவங்களிலும் இந்திய அணி ஆதிக்கம்:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
டெஸ்ட்:
2024ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 2024 வரை இந்திய அணி 122 ரேட்டிங்குடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. அதன்பிறகு, சில டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தரவரிசையில் சரிவை கண்டது. தற்போது ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 111 ரேட்டிங்குடன் இந்திய அணி 2வது இடத்தில் இருக்கிறது.
ஒருநாள்:
இந்திய அணி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தபடியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த நவம்பர் 2024 வரை, இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 118 மதிப்பீட்டில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. அதன்படி, தற்போது வரை இந்திய அணி இந்த தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
டி20:
இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்த சாதனைகளையும் இந்திய அணிக்கே கொடுக்கலாம். அந்த அளவிற்கு இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் இருந்தது. நவம்பர் 2024 வரை இந்திய அணி டி20 தரவரிசையில் 286 மதிப்பீட்டில் முதலிடத்தை பிடித்தது. இந்த மதிப்பீட்டை இந்திய அணி தற்போது வரை தக்க வைத்து கொண்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி இந்த ஆண்டு படைத்த சாதனைகள்:
- 2024ம் ஆண்டு அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 2024ல் இந்தியா இதுவரை 26 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.
- டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு இந்திய அணி 216 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளது. இது 2024ல் எந்த அணியின் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை விட மிக மிக அதிகம்.
- 2024ம் ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை 7 சதங்களை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் இத்தனை சதங்களை பதிவு செய்தது இல்லை.