Yuvraj Singh: ’தோனியை என் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன்’- சீறிபாய்ந்த யுவராஜ் சிங் தந்தை!
MS Dhoni: இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல வீரர்கள் தோனியை தங்களது ரோல் மாடலாக நினைக்கின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களுக்கு தோனி சப்போர்ட் செய்யவில்லை எனில் தங்களது கேரியர் எப்போதோ முடிந்திருக்கும் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் ஒருவரின் தந்தை தோனிதான், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக பேசியது இணையத்தில் விவாதங்களை கிளப்பி வருகிறது.
எம்.எஸ். தோனி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல வீரர்கள் தோனியை தங்களது ரோல் மாடலாக நினைக்கின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களுக்கு தோனி சப்போர்ட் செய்யவில்லை எனில் தங்களது கேரியர் எப்போதோ முடிந்திருக்கும் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் ஒருவரின் தந்தை தோனிதான், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக பேசியது இணையத்தில் விவாதங்களை கிளப்பி வருகிறது. எம்.எஸ்.தோனியை தாக்கி பேசியது வேறு யாரும் இல்லை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்தான்.
ALSO READ: Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!
என்ன சொன்னார் யுவராஜ் சிங்கின் தந்தை..?
ஜீ ஸ்விட்சின் யூடியூப் சேனலுடன் பேசிய யுவராஜ் சிங் தந்தை யோகராஜ், “எம்.எஸ்.தோனியை மன்னிக்க மாட்டேன். அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்ததை வாழ்நாளில் மன்னிக்க முடியாது. எனது மகனுக்கு எதிரான அவர் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வருகிறது. அவரை என் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். நான் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை செய்ததில்லை. முதலில், எனக்கு தவறு செய்த யாரையும் நான் மன்னிக்கவில்லை. இரண்டாவது, தவறு செய்தது என் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்களை ஏற்றுகொள்ள மாட்டேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் நான்கைந்து ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டிய என்பது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்.எஸ்.தோனி சீரழித்து விட்டார். யுவராஜ் போன்ற ஒரு மகனை உருவாக்க அனைவருக்கும் சவால் விடுகிறேன். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் கூட்ட இன்னொரு யுவராஜ் சிங் வரமாட்டார் என்று முன்பே கூறியுள்ளனர். புற்றுநோயை எதிர்த்துப் போராடி நாட்டிற்கான உலகக் கோப்பையை வென்றதற்காக இந்தியா, யுவராஜூக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ALSO READ: Yuvraj Singh: கோரிக்கை வைத்த கில்.. குஜராத் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் யுவராஜ் சிங்..?
கபில்தேவ் மீதும் குற்றச்சாட்டை அடுக்கிய யோகராஜ்:
யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் இந்தியாவுக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுகுறித்து பேசிய யோகராஜ், “ 1981ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து கபில்தேவ் உடனான எங்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ் என்னை அவரது போட்டியாளராக கருதி அணியில் இருந்து வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். யுவராஜ் தனது வாழ்க்கையில் 13 கோப்பைகளை வென்றார், அதேசமயம் கபில்தேவ் ஒரே ஒரு உலகக் கோப்பை பட்டத்தை மட்டுமே பெற்றுள்ளார். ” என்று தெரிவித்தார்.