5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ZIM Vs IND: அபிஷேக் சர்மா சதத்தால் பெருமைக்கொண்ட யுவராஜ்சிங்..!

ஜிம்பாவே அணிக்கு எதிராக முதன் முதலில் சர்வதேச கிரிக்கெட்டி போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். அந்த போட்டியில் இந்தியா ஜிம்ப்பாப்வே அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம் தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ZIM Vs IND: அபிஷேக் சர்மா சதத்தால் பெருமைக்கொண்ட யுவராஜ்சிங்..!
அபிஷேக் சர்மா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jul 2024 01:59 AM

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகம் ஆன இளம் வீரர் அபிஷேக் சர்மா முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சிஷ்யப்பிள்ளையாக வலம் வருகிறார். அவர் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக நன்றாக விளையாடிய நிலையில், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியில் அனைவரும் நன்றாக அபிஷேக் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால், 2வது போட்டியில் 46 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இதில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்று இருந்தார்.

Also Read: T20 World Cup: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்

இந்த நிலையில், அபிஷேக் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி மற்றும் ஆலோசனை அளித்து வரும் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவர் டக் அவுட் ஆனது குறித்து அதிர வைக்கும் கருத்து ஒன்றை கூறி இருக்கிறார். “யுவராஜ் சிங்கிடம் இடம் நேற்று நான் பேசினேன். நான் டக் அவுட் ஆனது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எனது ஆட்டத்திறன் மேம்பட என் வழிகாட்டியும், ரோல் மாடலுமான யுவராஜ் சிங்கின் பங்கு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளாக எனது கிரிக்கெட் ஆட்டத்தை பக்குவம் ஆக்கியவர் யுவராஜ் தான். இந்தப் பணியில் அவர் செலுத்திய உழைப்பு கடுமையானது. கிரிக்கெட் என்று இல்லாமல் எனது வாழ்வில் நல்லதொரு வழிகாட்டியாக உள்ளார்.

நான் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தேன். அதன் பின்னர் அவருக்கு போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. சதம் விளாசிய பிறகு மீண்டும் அவருக்கு போன் செய்தேன். பெருமை கொள்வதாக சொல்லி இருந்தார். இது தொடக்கம் தான் எனத் தெரிவித்தார். இதுபோன்ற இன்னிங்ஸ் வரும் நாட்களில் என்னிடம் இருந்து இன்னும் அதிகம் வரும் என்று சொன்னார். உனக்கு இலகுவாக பந்து வந்தால் நீ அதை அடித்து ஆடு. எத்தனை பந்துகள் வீணாக போனாலும் அது பற்றி கவலை இல்லை. உனக்கு இலகுவாக பந்து வந்தால் அதிகம் யோசிக்காமல் விளையாடு என்று கூறினார்.

 

Also Read: வடமாநிலங்களில் தொடரும் கனமழை.. உத்தர பிரதேசம், பீகாரில் 22 பேர் உயிரிழப்பு!

Latest News