5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மறுகூட்டல், மறுதேர்வு விவரங்கள்!

SSLC Result : இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மறுகூட்டல், மறுதேர்வு விவரங்கள்!
மாதிரிப்படம்
tamil-tv9
Tamil TV9 | Published: 10 May 2024 10:03 AM

10ம் வகுப்பு தேர்வர்கள் மறு கூட்டலுக்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்த 9.38 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 91.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.53% மாணவிகளும், 88.58% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மறு கூட்டலுக்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும்,மறு தேர்வு குறித்தான அட்டவனை ஜூலை 2ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

https://tnresults.nic.in/https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள லிக்கை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், TN SSLC Result 2024 என்றதை க்ளிக் செய்தவுடன் Login காட்டப்படும்.

அதில், உங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

உங்கள் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் அதை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.

Latest News