Thanjavur Crime News: பெற்றோர் கண்டிப்பு.. 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் அதிர்ச்சி!
தஞ்சை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்த மாணவனை, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் பலரும் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செல்போன்களில் கேம் விளையாடுவதற்கு அடிமையாகி உள்ளனர்.
செல்போன் பயன்படுத்தியதால் கண்டித்த பெற்றோர்
இதனால், செல்போன் பயன்பாட்டை மாணவர்கள் குறைக்க வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். அதையும் மீறி கண்டித்தால் விபரீத முடிவையும் எடுக்கின்றனர்.
அப்படி தான் தஞ்சையில் 10ஆம் வகுப்பு மாணவன் விபரீத முடிவை எடுத்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அகமதுபீர். இவரது மனை இர்ஷாத். 16 வயதான இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோரும் இவரை கண்டித்தும் வந்திருக்கிறார். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் தஞ்சையில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த இரண்டு நாட்களிலும் தேர்வுக்கு படிக்காமல் தொடர்ந்து செல்போனை இர்ஷாத் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது பெற்றோர் இர்ஷாத்தை கண்டித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை படிப்பதற்காக மாடிக்கு சென்றிருக்கிறார். அங்கு நீண்ட நேரமாகியும் இர்ஷாத் கீழே வராததால் அவரது சகோதரர் மாடிக்கு சென்று பாத்திருக்கிறார்.
Also Read : 4 மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை.. சென்னைக்கும் கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்
10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அப்போது இர்ஷாத், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இர்ஷாத்தின் சசோதரர் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் மாடிக்கு வந்து இர்ஷாத்தின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் இர்ஷாத்தின உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read : வெளியூரில் கணவன்.. உள்ளூரில் இரு இளைஞர்கள்.. இளம்பெண் கொலையில் ட்விஸ்ட்!
முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்கள் விடுமுறை மாணவர் இர்ஷாத் தேர்வுக்கு படிக்காமல் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், இர்ஷாத் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050