IAS Transfer: ராதாகிருஷ்ணன் முதல் அமுதா வரை.. மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்.. யாருக்கு என்ன துறை? முழு விவரம்..
தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்பட 10 மாவட்ட ஆட்சியர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக ரீதியாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்திரகலா ஐஏஎஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த வளர்மதி சமூக நலத்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா ஐஏஎஸ் புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ், அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக பி ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியராக ஆதித்யா செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read: இன்ஸ்டா வலை.. ரசிகர்களை அடிமையாக்கி பாலியல் தொழில்.. பிரபல மாடல் கைது.. ஷாக் சம்பவம்!
கடந்த 15 நாட்களுக்கு முன் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக சுகாதார துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகுவை சுகாதார துறை செயலாலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறை கே. மணிவாசன், ஐ.ஏ.எஸ்., , இடமாற்றம் செய்யப்பட்டு, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பி. சந்திர மோகன், ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறை, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மங்கத் ராம் ஷர்மா, ஐஏஎஸ், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, அரசு பொதுப்பணித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
Also Read: 47வது முறையாக நீதிமன்ற காவல் நீடிப்பு .. செந்தில் பாலாஜி வழக்கு மீண்டும் இரண்டு நாட்களில் விசாரணை..