Chennai Crime News: உடல் முழுக்க சூடு.. 16 வயது சிறுமி சித்ரவதை செய்து கொன்ற தம்பதி.. சென்னையில் ஷாக்!
சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொலை செய்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொலை செய்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமேந்தக் கரை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நவாஸ் (35). இவர் கார்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு நிவேதிதா என்ற மனைவியும், 6 வயதில் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.
16 வயது சிறுமி சித்ரவதை செய்து கொன்ற தம்பதி
இந்த நிலையில், நேற்று முன்தினம் நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி, வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, நீண்ட நேரமாகியும் குளிக்க சென்று வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி பாத்ரூம் கடையை நீண்ட நேரமாக தட்டி பார்த்தனர்.
கதவை சிறுமி திறக்காததால் உடைத்து பார்த்ததில் சிறுமி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமிய உயிரிழந்தது குறித்து வழக்கறிஞர் மூலம் நவாஸ் அமைந்தகரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நவாஸ் வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமி உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், நவாஸ் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
Also Read : நெஞ்சே பதறுதே.. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூரமாக கொன்ற இளைஞர்!
சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூரம்
அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரியவந்தது.
மேலும், சிறுமியை தினமும் கொடூரமாக தாக்கி, சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். சிகரெட்டால் சுட்ட தீக்காயங்கள் சிறுமியின் உடலில் உள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நவாஸ் தங்கை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவரது வீட்டிற்கு வேலை வந்ததும், சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்ததும் தெரியவந்தது.
Also Read : சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!
சிக்கிய தம்பதி:
இதனால் குடும்பத்தின் சூழல் காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து நவாஸ் வீட்டில் ஓராண்டாக வேலை செய்து வந்திருந்த நிலையில், அவர்கள் சிறுமியை சித்ரவதை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
வேலைக்கு வந்த சிறுமி தம்பதி சித்ரவதை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வீட்டில் வேலைக்கு சேர்க்கக் கூடாது என்பதன் சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் 16 வயது சிறுமியை பணிய அமர்த்தியது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. இதனால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.