சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு! - Tamil News | 17-year-old boy dies of suspected heatstroke in chennai thirunindravur | TV9 Tamil

சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published: 

01 Jun 2024 11:24 AM

Heat Stroke: இறந்து போன தனது நண்பனான ஹரிசுதன் உடலை பார்க்க திருநின்றவூர் தாசர் மேல்நிலைப் பள்ளியில் உடன்படித்த சக மாணவர்களுடன் வகுப்பு நண்பனான சக்தி என்ற மாணவன் வந்துள்ளார். அப்போது வெயில் தாக்கத்தால் சக்தி மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை உடனடியாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

மாதிரிப் படம்

Follow Us On

சென்னையில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். சென்னை திருநின்றவூரில் 12ம் வகுப்பு படித்து முடித்த ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த ஹரிசுதன் உடலை பார்க்க அவருடன் படித்த சக மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கடும் வெயிலினை தாக்கு பிடிக்க முடியாமல் சக்தி என்ற மாணவன் மயங்கி விழுந்துள்ளார் அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவன் திருநின்றவூர் கோமதிபுரத்தை சேர்ந்த ஹரிசுதன் என்ற மாணவன். இவருக்கு சிறுவயதில் இருந்த இதய நோய் பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்த மாணவர் ஹரிசுதன் சிகிச்சைப் பலனின்றி கடந்த மே 30ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்து போன தனது நண்பனான ஹரிசுதன் உடலை பார்க்க திருநின்றவூர் தாசர் மேல்நிலைப் பள்ளியில் உடன்படித்த சக மாணவர்களுடன் வகுப்பு நண்பனான சக்தி என்ற மாணவன் வந்துள்ளார். அப்போது வெயில் தாக்கத்தால் சக்தி மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை உடனடியாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

Also read… விழுப்புரம் அருகே தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை!

சக்திக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருப்பதாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த நண்பனின் உடலை பார்க்க சென்றபோது சுருண்டு விழுந்து  மாணவன் சக்தி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version