5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பானி பூரி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு? திண்டுக்கல் ஷாக்!

கடந்த சில காலமாகவே ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும்போது திடீரென மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஹோட்டல்களில் உணவுகளை முறையாக சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு தருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அசைவ உணவுகள் மட்டுமின்றி, நொறுக்குத்தீனிகளை சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதாலும் அதை முறையாக சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு தருவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திண்டுக்கல்லில் கடந்த 9ஆம் தேதி உணவகத்தில் பானி பூரி சாப்பிட்ட 17 வயது இளைஞர் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பானி பூரி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு? திண்டுக்கல் ஷாக்!
பானி பூரி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2024 11:09 AM

பானி பூரி சாப்பிட்ட இளைஞர்: கடந்த சில காலமாகவே ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும்போது திடீரென மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஹோட்டல்களில் உணவுகளை முறையாக சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு தருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அசைவ உணவுகள் மட்டுமின்றி, நொறுக்குத்தீனிகளை சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதாலும் அதை முறையாக சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு தருவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திண்டுக்கல்லில் கடந்த 9ஆம் தேதி உணவகத்தில் பானி பூரி சாப்பிட்ட 17 வயது இளைஞர் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஜூன் 7ஆம் தேதி வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்தில் பானி பூரி உள்ளிட்ட சாட் உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதை சாப்பிட்ட அவருக்கு சிறிது நேரத்திலேயே உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. உடனே இளைஞரின் பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 9ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Also Read: ராயப்பேட்டை மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிக் கும்பல்.. அலறிய நோயாளிகள்.. நடந்தது என்ன?

உயிரிழந்த சோகம்:

இதற்கு பானி பூரி சாப்பிட்டது காரணம் என்று சொல்லப்படுகிறது. இளைஞரின் பெற்றோர்களும் பானி பூரி சாப்பிட்டததால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டது என்றனர். இந்த மரணம் தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இளைஞர் பானிபூரி வாங்கிய உணவகத்தில் நேற்று மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பானி பூரி சாப்பிட்ட 17 வயது இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: யானைக் குட்டிக்காக கண்ணீர் விட்டு அழுத வனத்துறை.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Latest News