Tamilnadu Weather Alert : கொட்டித் தீர்க்கும் கனமழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. இன்றைய மழை நிலவரம் என்ன? - Tamil News | 19 districts of Tamil Nadu will have heavy rain today | TV9 Tamil

Tamilnadu Weather Alert : கொட்டித் தீர்க்கும் கனமழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. இன்றைய மழை நிலவரம் என்ன?

Published: 

31 Oct 2024 14:04 PM

Diwali | சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

1 / 5நாடு

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால் மழை நிலவரம் குறித்து அனைவருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

2 / 5

நேற்று (அக்டோபர் 30)யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில், மழை குறித்து சென்னை இன்று (அக்டோபர் 31) வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

3 / 5

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு,  தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

4 / 5

நாளை (நவம்பர் 1) மிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5

வரும் நவம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா?
இஞ்சி ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?
அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!