Coimbatore: கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழப்பு
வெடிக்காமல் இருந்தால் குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனர். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் கலவரத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் பாஜக தேர்தல் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவரான பாட்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக பரோலில் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் நேற்று உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாட்ஷாவின் உடல் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டனில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
Also Read: Coimbatore: ஓனரே இப்படி செய்யலாமா? – வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் கைவரிசை!
மறக்க முடியாத குண்டு வெடிப்பு சம்பவம்
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 11 இடங்களில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியாகவும் குண்டுவெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகவும் பாஷா செயல்பட்டார் என கண்டறியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில் 72 வயதான அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார்.
Also Read: Viral: ரூ.4க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி.. சாலையை மறித்த பொதுமக்கள்!
இதில் வெடிக்காமல் இருந்தால் குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனர். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் கலவரத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் பாஜக தேர்தல் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதில் எல்.கே.அத்வானி பங்கேற்க இருந்த நிலையில் அவரைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகவே இந்து குண்டு வெடிப்புகள் நடந்ததாக விசாரணைகள் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் தலைமையில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையானது அந்த ஆண்டு மே 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் பாஷா குண்டுவெடிப்புக்கான சதித்திட்டங்களை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருடன் சேர்த்து 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 5 பேர் பெங்களூருவில் போலீஸாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.