5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல தீவிரமடைந்து தமிழகத்தில் நல்ல மழை பொழிவு பதிவானது. அதேபோல் ஜூலை மாதம் முதல் வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை ஒரு ஆட்டம் காட்டியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பதிவானது. இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல விலகும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..
கோப்பு புகைப்படம் (pic courtesy: imd)
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2024 08:44 AM

வழக்கமாக தென் மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மே மாதம் 30 ஆம் தேதியே தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல தீவிரமடைந்து தமிழகத்தில் நல்ல மழை பொழிவு பதிவானது. அதேபோல் ஜூலை மாதம் முதல் வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை ஒரு ஆட்டம் காட்டியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பதிவானது. இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல விலகும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் அல்லது அடுத்த வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது . இதன் காரணமாக 23-ஆம் தேதி அதாவது இன்று, மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று ஓரிரு இடங்களில் 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 29 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை, கோவை, திருப்பூர்.. தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23.09.2024 மற்றும் 24.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.09.2024 மற்றும் 26.09.2024: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

23.09.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.09.2024 மற்றும் 25.09.2024:தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.09.2024: தென்மேற்கு, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் படிக்க: 310 வருட பாரம்பரியம்.. திருப்பதி லட்டு வரலாறு தெரியுமா?

அரபிக்கடல் பகுதிகள்:

23.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக -கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக -கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.09.2024 மற்றும் 26.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

Latest News