Cuddalore: ஆற்றில் சடலமாக கிடந்த 2 பெண் குழந்தைகள்.. தந்தையே வீசிய கொடூரம்!

இரண்டு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ராஜாராம் உத்தரவின் பேரில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Cuddalore: ஆற்றில் சடலமாக கிடந்த 2 பெண் குழந்தைகள்.. தந்தையே வீசிய கொடூரம்!

தென்பெண்ணை ஆற்றில் போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்கும் காட்சி

Published: 

16 Dec 2024 16:00 PM

கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் தொடங்கி 430 கிலோமீட்டர் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கிறது. இந்த ஆறானது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பயணித்து கடலில் கலக்கிறது. இப்படியான நிலையில் கடலூர் மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துணி சுற்றப்பட்ட நிலையில் கட்டைப்பையில் ஏதோ ஒன்று மிதந்த நிலையில் வந்தது.

இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக புதுநகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதனை எடுத்து பார்த்தபோது அதில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணியின் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிறிது தூரத்தில் மற்றொரு குழந்தையின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதால் மிகப் பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: Namakkal: ஜோதிடர் பேச்சை கேட்டு குவிந்த மக்கள்.. நாமக்கல் கோயிலில் திடீர் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ராஜாராம் உத்தரவின் பேரில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இரண்டு குழந்தைகளையும் உயிருடன் ஆற்றில் வீசினார்களா? அல்லது கொலை செய்து வீசப்பட்டார்களா? என்று கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் – ஜெயப்பிரியா என்ற தம்பதியினருக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 14) இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. எதிர்பாராத விதமாக இரண்டு குழந்தைகளும் நேற்று (டிசம்பர் 15) இரவு அடுத்தடுத்து உயிரிழந்ததால் இருவரும் தவித்துப் போய் உள்ளனர். அதே சமயம் ஜெய பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை பிரபாகரன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read: Viral Video: கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை.. மீட்டது எப்படி? திக்திக் வீடியோ!

இதனால் இறந்த குழந்தைகளை முறையாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் வீசி சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைகள் இறந்ததாக பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.  பெற்ற தந்தையே தனது இறந்த குழந்தைகளை ம் முறைப்படி அடக்கம் செய்யாமல் ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையானது முடிவுக்கு வந்தது. பிரபாகரனை காவல்துறையினர் விசாரணை செய்து தகவல்கள் அனைத்தையும் சேகரித்தனர். இருந்தாலும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தவுடன் குழந்தைகள் இறந்த பின்னர் தூக்கி வீசப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற  உண்மை தெரியவரும்.

இணையத்தை கலக்கும் கீர்த்தியின் கல்யாண கொண்டாட்ட போட்டோஸ்
கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்
நடிகை அதுல்யா ரவி பற்றிய சுவாரஸ்ய தகவல்!
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமண ஆல்பம்!