Trichy: நாக்கின் நுனிப்பகுதி வெட்டும் ஆபரேஷன்.. திருச்சியில் இருவர் கைது!
உடலில் டாட்டூ போடுவது, அணிகலன்கள் குத்துவது என்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கென ஒவ்வொரு இடங்களிலும் பிரத்யேகமான சிறிய முதல் பெரிய கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கும் ஆபத்தை உணராமல் அழகுக்காகவும், மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியவும் சிலர் செய்கின்றன.
திருச்சியில் உரிய அனுமதியின்றி நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிட்டு கலர் செய்யும் செயலை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் பல்வேறு விஷயங்களும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடலில் டாட்டூ போடுவது, அணிகலன்கள் குத்துவது என்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கென ஒவ்வொரு இடங்களிலும் பிரத்யேகமான சிறிய முதல் பெரிய கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கும் ஆபத்தை உணராமல் அழகுக்காகவும், மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியவும் ஆபத்தை விலை தேடிக் கொள்கிறவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் தலை முதல் கால் வரை டாட்டூ, அணிகலன்கள் குத்துவது போன்றவை தொடர்கதையாகி விட்ட நிலையில் இதில் உயிரிழப்புகள் வரை விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
Also Read: Ilaiyaraaja: சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்
தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஹரிஹரன் என்பவர் நடத்தி வரும் நிலையில் இங்கு வருபவர்களுக்கு உடலில் டாட்டூ வரைவதோடு, கண் கருவிழிகளுக்குள் வண்ணம் தீட்டுவது, நாக்கின் நுனிப்பகுதியை ஆபரேஷன் செய்து இரண்டாக பிளவுப்படுத்தி வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஹரிஹரன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பான தகவல்கள் திருச்சி மாவட்டத்தில் வைரலான நிலையில் பல இளம் தலைமுறையினரும் அந்த கடைக்கு வாடிக்கையாக வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஹரிஹரன் நுனி நாக்கை இரண்டாக பிளவுப்படுத்தி வண்ணம் தீட்டுவது போன்ற வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் சர்ச்சையையும் கிளப்பியது. இதனையடுத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தவறான பாதைக்கு ஹரிஹரன் அழைத்து செல்வதாக சமூக வலைதளங்களில் பலரும் அவர் மீது குற்றம் சாட்டினர்.
Also Read: Namakkal: ஜோதிடர் பேச்சை கேட்டு குவிந்த மக்கள்.. நாமக்கல் கோயிலில் திடீர் பரபரப்பு!
சிலர் திருச்சி மாநகர காவல்துறையை டேக் செய்து புகாரளித்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக எந்தவித அனுமதியும் இன்றி மருத்துவத்துறையின் கட்டுப்பாடுகளை மீறி நுனி நாக்கில் ஆபரேஷன் செய்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து திருச்சி மாநகர கமிஷனர் காமினி ஐபிஎஸ் உத்தரவின் பெயரில் ஹரிஹரன் மற்றும் அவர் கடையில் வேலை பார்த்த ஜெயராமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.