5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: 2 மாதம் 267 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போட்டில் கடை போட்ட யூடியூபர்.. சிக்கியது எப்படி?

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Crime: 2 மாதம் 267 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போட்டில் கடை போட்ட யூடியூபர்.. சிக்கியது எப்படி?
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jul 2024 11:08 AM

2 மாதம் 267 கிலோ தங்கம் கடத்தல்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, துபாயில் இருந்து வந்த பயணிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பெண்கள் உட்பட 6 பயணிகள் அவர்களுடைய உடமைகள், உள்ளாடைகளை போன்றவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு பயணிகளிடம் சுங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சிக்கிய யூடியூபர்:

இந்த சோதனையில் 4 பயணிகளிடம் இருந்து தங்கப் பசை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நேற்று முன் தினம் இரண்டு விமானங்களில் 10 பயணிகளிடம் இருந்து ரூ.7.58 கோடி ரூபாய் மதிப்புடைய 12.095 கிலோ தங்கத்தை பறிமுதுல் செய்தனர். மேலும், தங்கம் கடத்திய 10 பயணிகளையும் கைது செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல் காரர்கள் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் யூடியூபர் சபீர் அலி என்பவரின் உதவியோடு கடையை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் கடத்தல்காரர்கள் தொடர்ந்து இதுபோன்று தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களில் ரூ.167 மோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது.

Also Read: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ!

தங்கம் கடத்திய எப்படி?

யூடியூபர் சபீர் அலி மற்றும் அவரது நண்பர்கள் விமான நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை குத்தகைக்கு எடுத்து பொம்மைகளை விற்பனை செய்வது போல் நடித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த கடையில் ஏழு நபர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன பிசிஏஎஸ் பாஸ் இவர்கள் வாங்கியுள்ளனர். இந்த பாஸ் மூலம் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கடத்தி கொண்டு வரும் தங்க கட்டிக விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சபீர் அலிக்கு தகவல் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என தெரிகிறது.

அதன்பின் சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி தங்கத்தை அவர்களுடை உள்ளாடைகளுக்குள் மறைத்து வெளியில் கொண்டு வந்து எந்தவித சுங்க சோதனையில் இல்லாமல் கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும் இப்படியே கடந்த 2 மாதமாக தங்கம் கடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சபீல் அலி உட்பட 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… தொடர்ந்து அழுததால் ஆத்திரம்!