Viral Video: நோ என்ட்ரியில் வந்த கார்.. தட்டிக்கேட்ட காவலாளிக்கு அடி.. 3 பேர் கைது! - Tamil News | 3 convicts arrested for attacking Mamallapuram private security | TV9 Tamil

Viral Video: நோ என்ட்ரியில் வந்த கார்.. தட்டிக்கேட்ட காவலாளிக்கு அடி.. 3 பேர் கைது!

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் இங்கு வருபவர்கள் சிற்பக் கலைகளை பார்வையிட்டு விட்டு கடற்கரையிலும் சிறிது நேரம் நேரத்தை கழித்து விட்டு செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசலை தடுக்க அப்பகுதியில் பல்வேறு காவலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஐந்து ரதம் புராதான சின்னம் அருகில் வந்த கார் ஒன்று நோ பார்க்கிங் வழியாக சென்று காரை பார்க் செய்ய முயன்றுள்ளது.

Viral Video: நோ என்ட்ரியில் வந்த கார்.. தட்டிக்கேட்ட காவலாளிக்கு அடி.. 3 பேர் கைது!

கைது செய்யப்பட்ட 3 பேர்

Published: 

22 Oct 2024 15:03 PM

காவலாளி மீது தாக்குதல்: பிரபல சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு நாள்தோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள சிற்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆர்வமுடன் பார்வையிடுவது வழக்கம். இதனால் எப்போது பார்த்தாலும் மாமல்லபுரம் பொதுமக்களால் நிரம்பி இருக்கும். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் இங்கு வருபவர்கள் சிற்பக் கலைகளை பார்வையிட்டு விட்டு கடற்கரையிலும் சிறிது நேரம் நேரத்தை கழித்து விட்டு செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசலை தடுக்க அப்பகுதியில் பல்வேறு காவலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஐந்து ரதம் புராதான சின்னம் அருகில் வந்த கார் ஒன்று நோ பார்க்கிங் வழியாக சென்று காரை பார்க் செய்ய முயன்றுள்ளது.

Also Read: Youtuber Irfan: இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

அப்போது அங்கு காவலாளியாக வேலை செய்து வரும் ஏழுமலை என்ற நபர் காரை வழிமறித்துள்ளார். மேலும் இந்த வழியாக செல்லக்கூடாது என்றும், ஐந்து ரதம் வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கொஞ்சம் கூட கேட்காத காரில் இருந்தவர்கள் நோ என்ட்ரி வழியாக உள்ளே செல்ல முயன்றனர். இதனால் ஏழுமலை காரில் இருந்தவர்களை பார்த்து கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பைப் வைத்திருந்தார். திடீரென காரில் இருந்து இறங்கிய ஒரு பெண் இறங்கி ஏழுமலையை கன்னத்தில் பளார் என அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் திரும்பி தாக்க முயன்றார். ஆனால் அதற்குள் காரில் இருந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் இறங்கி ஏழுமலையை தாக்கினர்.  எப்படி நீ காரை தட்டலாம், எங்களைத் திட்டலாம் என கூறி 4 பேரும் ஏழுமலையை சரமாரியாக தாக்கினார்கள்.

பதிலுக்கு ஏழுமலையும் தாக்க முயற்சிக்க இதனால் மேலும் கோபம் கொண்ட அந்த 4 பேர் அவரை கீழே தள்ளி அடி வெளுத்தனர். குறிப்பாக ஏழுமலை கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி அந்த பைப் அளவுக்கு நான்கு பேரில் இருந்த ஒரு பெண் தாக்கி அவரது சட்டையை கிழித்தார். இந்த அடி, உதையை சற்றும் எதிர்பாராத ஏழுமலை வலியில் கதறி அழுதார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக மாறியது. ஏழுமலையை தாக்கியவர்கள் அங்கிருந்து உடனடியாக கிளம்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

Also Read: Aavin Ice Cream : ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்.. நவம்பர் 1 முதல் புதிய விலை அமல்!

இந்த காட்சிகளை அப்பகுதியில் நின்றிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட அது சமூக வலைதளங்களில் கடும் வைரலானது. பலரும் ஏழுமலையை தாக்கிய 4 பேருக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஏழை என்றால் இளக்காரமாக போய்விட்டதா? தவறான வழியில் வந்து விட்டு அவரை தாக்கியது எவ்வித நியாயம் என கேள்வி மேல் கேள்வியெழுப்பினர். மேலும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை சமூக வலைதளங்கள் வாயிலாக கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் வீடியோ அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இப்படியான நிலையில் சென்னை தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரபுதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகிய 3 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மாஸ்டர் பட நடிகை தான் இந்த பாப்பா...
மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?