இரண்டரை மாதத்துக்குள் 3 என்கவுண்டர்.. சென்னையில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம்.. நடந்தது என்ன?
அருண் காவல் ஆணையராக பொறுபேற்ற பின் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம் ஜூலை மாதம் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள முயற்சித்த போது போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை காவல் ஆணையராக அருண் பொறுபேற்ற பிறகு 3 ரவுடிகள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அருண் பொறுப்பேற்ற போது ரவுடிகளுக்கு புரியும் பாஷையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருண் 1998 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சின்ன திருப்பதி சொந்த ஊர். 1998-ல் உதவி எஸ்பியாக நாங்குநேரி, தூத்துக்குடியில் பணியாற்றினார். 2002 இல் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று கரூர், கன்னியாகுமரியில் பணியாற்றினார். துணை ஆணையராக சென்னை அண்ணா நகர், பரங்கிமலையிலும் எஸ்.பி.யாக சிபிசிஐடி பிரிவு, திருப்பூர், போதைப் பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார்.
2012 இல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று தலைமையிடம், சென்னை போக்குவரத்து வடக்கு, சட்டம் – ஒழுங்கு தெற்கு, திருச்சி சரகத்தில் பணியாற்றினார். 2016 இல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையர், சென்னை போக்குவரத்து கூடுதல்காவல் ஆணையர், வட சென்னைகாவல் ஆணையர், காவலர் பயிற்சி பள்ளி ஆகிய பொறுப்புகளை வகித்தார். 2023 இல் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளை சிஐடி, ஆவடி காவல் ஆணையர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பதவிகளில் பங்களிப்பை செலுத்தினார். பல மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி,சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அருண் காவல் ஆணையராக பொறுபேற்ற பின் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம் ஜூலை மாதம் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள முயற்சித்த போது போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் செப்டம்பர் 18 ஆம் தேதி காக்கா தோப்பு பாலாஜி என்ற பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகள் உள்ளது. சென்னை அண்ணா சாலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி காக்கா தோப்பு பாலாஜியும் அவரது நெருங்கிய நண்பருமான தென் சென்னை தாதா சிடி மணியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரவுடி சம்பவம் செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நூலிழையில் இருவரும் உயிர் தரப்பினர்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த சீசிங் ராஜா?
இந்த சம்பவத்துக்கு பிறகு கைதாகி சிறை சென்ற பாலாஜி, சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஆந்திர எல்லையோரம் பகுதிகளில் பதுங்கி இருந்து வழக்கம்போல தனது ஆட்கள் மூலம் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தார். அதனை தொடர்ந்து கைது செய்ய முயற்சி செய்த போது அவர் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று மேலும் ஒரு ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்டாங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பரான ரவுடி சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக ஆந்திராவில் அவரது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டு தீவிரமாக சீசிங் ராஜாவை தேடி வந்த நிலையில் ஒருமுறை போலீசாரின் பிடியிலிருந்து காரில் தப்பி சென்றார்.
இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் கட்டப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை சீசிங் ராஜா எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதாகவும் எதிர்பாராத விதமாக இரண்டு குண்டுகள் வாகனத்தின் மீது பட்ட நிலையில், தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் சீசிங் ராஜாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.