Bus Accident: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் சாலைகளில் பயணிக்கவே அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பேருந்துகள் லாப நோக்கத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஓய்வில்லாமல் தொழிலாளர்கள் உழைப்பது, தரமற்ற சாலை, வாகனங்களின் தரம் இல்லாத நிலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த விபத்துக்கு காரணமாக அமைகிறது.

Bus Accident: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!

விபத்தில் கவிழ்ந்த பஸ்

Updated On: 

27 Sep 2024 09:56 AM

பேருந்து விபத்து: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மம்சாபுரம் காந்திநகர் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாக பேருந்து ஓட்டியதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Also Read: Happy Birthday Lakshmipathy Balaji: கில்லர் ஸ்மைல்.. அக்தர் பந்தில் சிக்ஸர்.. பாகிஸ்தானில் லட்சுமிபதி பாலாஜி செய்த சம்பவம்!

ஒரே நாளில் நடந்த விபத்துகள்

இதனிடையே திருப்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து தாராபுரம் அருகே சென்றபோது திடீரென பேருந்தில் இருந்து புகை வருவதை கண்ட பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அனைவரையும் உடனடியாக கீழே இறக்கினார். இதற்கிடையில் அரசு பேருந்து முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் அருகே தமிழக பயணிகள் 55 பேர் சென்ற சொகுசு பேருந்து ஒன்று தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் அனைவரும் உயிருக்கு போராடிய நிலையில் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மீட்பு குழுவினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்துள்ள மேலப்புலம்புதூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருந்து இயக்கப்படும் வாகனம் ஒன்று வழக்கம்போல 32 மாணவர்களின் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. மேலப்புலம்புதூர் பகுதி குறுகிய சாலை என்பதால் பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில்  அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது . இதனால் வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்களை மீட்டனர். இதில் ஒரு மாணவனுக்கு மட்டும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அம்மாணவனை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . மற்ற குழந்தைகள் சிறு குழந்தைகளுடன் உயிர் தப்பினர்.

Also Read: Crime: தென்காசியில் 3 பேர் கொலை.. 4 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருச்சி செல்லும் புறவழி சாலையில் 2 தனியார் பேருந்துகள்  மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாதானபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை தனியார் பேருந்து இறக்கிவிட்டுக் கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றொரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் சாலைகளில் பயணிக்கவே அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பேருந்துகள் லாப நோக்கத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஓய்வில்லாமல் தொழிலாளர்கள் உழைப்பது, தரமற்ற சாலை, வாகனங்களின் தரம் இல்லாத நிலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த விபத்துக்கு காரணமாக அமைகிறது. இனி தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!