School Leave : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?

Heavy Rain | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், பெரும்பாலான பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், சில பகுதிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

School Leave : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Dec 2024 00:25 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதாவது, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், அதன்படியே கடந்த நவம்பர் 29 ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் சென்னையில் கரையை கடக்கும் என கணித்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்ப்பட்டது. ஆனால், புயலின் வேகம் திசை மாற தொடங்கியதால் ரெட் அலர்ட் வாபஸ் வாங்கப்பட்டது. இந்த நிலையில், பெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையும் படிங்க : Vijay : வெள்ள பாதிப்பு.. பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரண பொருட்கள் கொடுத்த விஜய்!

ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கடும் சவால்களை சந்தித்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. அதன்படி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வீட்டை வெளியேற முடியாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர், குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு நிலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.  இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. விழும்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. மேலும், திருவண்ணாமலை மலைப்பகுதில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Manjolai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்.. அரசே ஏற்று நடந்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

இவ்வாறு கடந்த 24 ஆம் தேதி முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும் புயல் கரையை கடந்து விட்டதாலும் மழையின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மெதுவாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளுக்கு நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Crime: அமைச்சருக்கு மிரட்டல்.. நைட்டி அணிந்துகொண்டு வாக்குவாதம்.. போலீசாரை அலறவிட்ட போதை நபர்!

வட மாவட்டங்களில் பல பகுதிகளில் மீட்பு பணிகள் நிறைவு பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தாலும், சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 3 உள்ளாட்சிகளுக்கு அந்த மாவாட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?