Tiruvallur: டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கேற்ப சரியான உணவினை வழங்க வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தையை சிறு வயதிலிருந்து பழக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வயதையும், வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாமல் வெவ்வேறு வகையான உணவுகளை வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiruvallur: டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

குழந்தை வெங்கடலட்சுமி

Updated On: 

25 Nov 2024 12:42 PM

திருவள்ளூர் அருகே பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் அரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அமுலு என்ற மனைவியும், வெங்கட லட்சுமி என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே குழந்தை வெங்கடலட்சுமிக்கு நேற்று காலை டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டி உள்ளனர். அதாவது டீயில் பிஸ்கட்டை தொட்டு கொடுத்துள்ளனர். அப்போது குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறிய குழந்தைக்கு பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக செங்குன்றம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு வெங்கட லட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்   குழந்தை வெங்கட லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம்  விசாரணை நடத்தினர்.

Also Read: Accident: கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி!

இந்நிலையில் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கேற்ப சரியான உணவினை வழங்க வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தையை சிறு வயதிலிருந்து பழக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வயதையும், வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாமல் வெவ்வேறு வகையான உணவுகளை வழங்கி சோதனை செய்கின்றனர். இது ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் இருக்காது என்பதால் சரியான கலவையில், காரத்தில் உணவினை கொடுக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மற்றொரு விபத்து

இதே திருவள்ளூரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சோறு வடிக்கும் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிறுமி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு வடமாநில மக்கள் குடும்பமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர்  தனது மனைவி மற்றும் மகள் நந்தினி உடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

Also Read: Crime: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

இதனிடையே 16 வயதான நந்தினி கடந்த நவம்பர் 14ஆம் தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பாத்திரத்தில் வைக்கப்பட்ட சாதத்தை வடிக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நந்தினி மீது எதிர்பாராத விதமாக வடிகஞ்சி பட்டுள்ளது. சூடு தாங்காமல் அலறிய அவரின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஒரு வார காலமாக சிகிச்சையில் இருந்த நந்தினி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?