Viral Video: கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை.. மீட்டது எப்படி? திக்திக் வீடியோ!
Chennai Anna Nagar Tower Park: சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிட பேராட்டத்திற்கு பிறகு குழந்தையை தலையை அவரது பெற்றோரே பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறுமியின் தலையை பெற்றோரே பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் வார இறுதி நாட்களில் கடற்கரைகள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் வார இறுதி நாட்களில் பொழுதை கழிக்க கடற்கரை, பூங்காவுக்கு வருகை தருவார்கள். அதில் அண்ணா நகர் டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. அண்ணா நகர் டவர் பூங்கா சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. 1968ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பூங்கா, 2011ஆம் ஆண்டு மூடப்பட்டது.
கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை
மறுசீரமைப்பு பணிக்காக இந்த பூங்கா மூடப்பட்ட நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த பூங்கா திறக்கப்பட்டதில் இருந்தே பொதுமக்கள் பலரும் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த பூங்காவில் 12 மாடி கொண்ட டவருக்கு வருவார்கள்.
இதன் மீது ஏறி சென்னையில் அழகை காண தினம்தோறும ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை ஒரு தம்பதி தங்களது 3 வயது குழநதையுடன் அண்ணா டவர் பூங்காவிற்கு வந்துள்ளனர். பின்னர், அவர்கள் குழந்தையுடன் டவர் ஏறி சென்று சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இவர்களது குழந்தை தடுப்பு கம்பிக்கு நடுவில் தலையைவிட்டு எட்டி பார்த்திருக்கிறது. இதனால் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை இரு கம்பிகளுக்கு நடுவே சிக்கியிருக்கிறார். இதன்பின், தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை கதறி அழுது இருக்கிறது.
Also Read : முன்னாள் காதலியை தாக்கிய இளைஞர்.. பிரேக் அப் சொன்னதால் ஆத்திரம்.. சென்னையில் அதிர்ச்சி!
அண்ணா நகர் டவர் பூங்காவில் பரபரப்பு
சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறுமியின் தலையை பெற்றோரே பத்திரமாக மீட்டனர்.#Chennai #Towerpark #viralvideo pic.twitter.com/1PanaDnGpb
— TV9 Tamil (@TV9Tamil) December 16, 2024
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தையின் தலையை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சில நிமிட பேராட்டத்திற்கு பிறகு குழந்தையை தலையை அவரது பெற்றோரே பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, குழந்தைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது.
Also Read : காலநிலை மாற்றத்தால் அழிகிறதா சென்னை? முதல்வர் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
குழந்தைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அண்ணா நகர் டவர் பூங்காவில் 3 வயது குழந்தையின் தலை சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.