5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்.. 5 பேர் பலியான நிலையில் 10 பேர் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்!

Krishnagiri Accident | கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 13 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 கார்கள், 4 லாரிகள் மற்றும் ஒரு பேருந்து ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதி கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்.. 5 பேர் பலியான நிலையில் 10 பேர் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்!
விபத்து
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 25 Aug 2024 17:51 PM

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 13 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 கார்கள், 4 லாரிகள் மற்றும் ஒரு பேருந்து ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதி கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கொடூர விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் தண்டவாளத்தி படுத்து தூங்கிய முதியவர்.. நெருங்கிய ரயில்.. அடுத்து நடந்தது என்ன?

நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பிறந்தநாள் கொண்டாட்டம்.. திடீரென மயங்கி விழுந்த விஜயகாந்த் மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

விபத்தின் காரணமாக சாலையின் இரு புறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால், சாலையில் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 13 வாகங்கள் விபத்தில் சிக்கியதால், சேதமான வாகனங்கள், சிதறி கிடக்கும் உதிரி பாகங்களை சாலையில் இருந்து  அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெடுஞ்சாலையில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதையும் படிங்க : Love Issue : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்..விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி.. சோக சம்பவம்!

தேசிய நெடுஞ்சாலையில் 13 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News