5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோயம்பேடு டூ திருவண்ணாமலை.. இனி கிளாம்பாக்கம் போக வேண்டாம்.. போக்குவரத்து துறை அதிரடி!

ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகளும், காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக தினசரி இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகளும் என் மொத்தம் 85 பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். இதேபோல, கிளாம்பாக்கத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 175 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு டூ திருவண்ணாமலை.. இனி கிளாம்பாக்கம் போக வேண்டாம்.. போக்குவரத்து துறை அதிரடி!
பேருந்து
umabarkavi-k
Umabarkavi K | Published: 19 May 2024 12:38 PM

இனி கிளாம்பாக்கம் போக வேண்டாம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக கிளாபாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை செல்லும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் கோயம்போடு சந்தை சுற்றுவட்டார பகுதிகளில் பணி செய்து வருவதால் திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று மே 23ஆம் தேதி முதல் கோயம்பேடு நிலையத்தில் இருந்து 85 பேருந்துகளை இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது, ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகளும், காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக தினசரி இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகளும் என் மொத்தம் 85 பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். இதேபோல, கிளாம்பாக்கத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 175 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Also Read : Tamil Nadu Weather : அடுத்த 3 மணி நேரம்… 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம்!

23ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து பேருந்து:

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்) மூலமாக தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேற்கண்ட கோரிக்கைகளின்படி வருகிற மே 23ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.100 இருக்கா? நாள் முழுவதும் பயணம் செய்யலாம்.. சென்னை மெட்ரோவின் செம்ம ஆஃபர்!

Latest News