National Best Teacher Award 2024 : தேசிய நல்லாசிரியர் விருது.. குக்கிராமத்தில் இருந்து தேர்வான கோபிநாத்.. அப்படி என்ன செய்தார்?
R Gopinath | ஆசிரியர் கோபிநாத் என்பதை தாண்டி தெருவிளக்கு கோபிநாத் என்பதுதான் அவரது அடையாளமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை போல் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாடம் எடுக்க போகும் தலைப்புகளில் வரும் கதாப்பாத்திரங்களை போல வேடம் அணிந்து சென்று பாடம் நடத்துவது என பல்வேறு முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.
தேசிய நல்லாசிரியர் விருது : ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது. ஆசிரியர்கள் தான் பலருக்கு வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்துள்ளனர். கல்வி மட்டுமன்றி, ஒழுக்கம், வாழ்க்கை குறித்த அனுபவங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். சிறந்த ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குகின்றனர். இன்றும் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்று உயரத்தில் இருக்கும் மனிதர்கள் பலர், தங்களது ஆசியர்களை நினைவு கூர்வது மற்றும் அவர்களுக்கு நன்றி கூறுவதை பார்கிறோம். அந்த அளவுக்கு மாணவர்களின் வாழ்க்கையில் தாக்க்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 ஆம் தேதி வரை பொளக்கப்போகும் மழை..
தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 2 ஆசிரியர்கள்
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் கொண்ட அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தெருவிலக்கு கோபிநாத் என்கிற கோபிநாத் மற்றும் மதுரை மாவட்டம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கோபிநாத்?
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தேர்வாகியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் அந்த அசிரியர் அப்படி என்ன செய்துவிட்டார் எனவும் பலரையும் கேள்வி எழுப்ப வைக்கிறது. ஆசிரியர் கோபிநாத் என்பதை தாண்டி தெருவிளக்கு கோபிநாத் என்பதுதான் அவரது அடையாளமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை போல் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாடம் எடுக்க போகும் தலைப்புகளில் வரும் கதாப்பாத்திரங்களை போல வேடம் அணிந்து சென்று பாடம் நடத்துவது என பல்வேறு முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.
சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் கோபிநாத்
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கோபிநாத், “எனது பணி காலத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான பயத்தை போக்க விரும்பினேன். எனவே ஆசிரியர்,மாணவர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கும் பொருட்டு பள்ளிக்கு சீருடை அணிந்து சென்றேன். அதை கண்ட மாணவர்கள் “டேய் டீச்சர பாரு நம்மள மாதிரியே வராரு” என கூறினர். அப்போது அதை நான் எனது நோக்கத்தின் முதல் வெற்றியாக பார்த்தேன்” என்றார்.
இதையும் படிங்க : விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட வேலை… டப்பிங் பணியை தொடங்கிய மஞ்சு வாரியர்
தெருவிலக்கு கோபிநாத் என பெயர் வந்ததுக்கு காரணம் என்ன?
மேலும் தெருவிலக்கு கோபிநாத என்ற பெயர் எப்படி வந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள் மாலை நேரத்தில் கல்வி பயிலும் வகையில் இரவு பள்ளி நடத்தில் வருகிறேன். அதில் சுமார் 90 பேர் கல்வி கற்கின்றனர்”. ஒரு தெருவிளக்கு தன்னால் எவ்வளவு தொலைவுக்கு வெளிசத்தை காட்ட முடியுமோ அப்படி எனது கல்விச் சேவையை தொடர விரும்பி தெருவிளக்கு பள்ளியை நடத்தி வருவதால் அந்த பயர் வந்ததாக அவர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.