Shocking News : 10 ரூபாய் குளிர்பானத்தை குடித்த 5 வயது சிறுமி பரிதாப பலி.. நடந்தது என்ன?
Cool Drink | திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாலைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 5 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் காவியா ஸ்ரீ, வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடையில் ரூ.10-க்கு விற்பனை செய்யும் குளிர்பானத்தை வாங்கி குடித்துல்ளார். குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களிலேயே சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
5 வயது சிறுமி உயிரிழப்பு : நவீன கால உணவு பழக்கங்களும், உணவுகளும் உடலுக்கு தீங்கு விலைவிக்க கூடியவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அத்தகைய உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் குளிர்பானம், சிப்ஸ் உள்ளிட்டவற்றை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். அவ்வாறு குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமியின் உயிர் பரிதாபமாக பரிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Crime: கொல்கத்தாவை நடுங்க வைத்த சம்பவம்.. பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம்.. திடுக்கிடும் தகவல்கள்!
10 ரூபாய் குளிர்பானத்தால் பரிபோன 5 வயது சிறுமியின் உயிர் – அதிர்ச்சி சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாலைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 5 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் காவியா ஸ்ரீ, வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடையில் ரூ.10-க்கு விற்பனை செய்யும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களிலேயே சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே சிறுமியின் வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வெளியேரிய நிலையில், சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு தீவுர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : Shocking News : பெண்களின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!
எனது மகளின் மரணத்திற்கு குளிர்பானம் தான் காரணம் – சிறுமியின் தந்தை குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகளின் மரணத்திற்கு குளிர்பானம் தான் காரணம் என குற்றம்சாட்டிய ராஜ்குமார், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தன் மகளை போன்று வேறு யாரும் பாதிக்கபடாத வகையில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி சில நிமிடங்களிலேயே துடி துடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இது போன்று குளிர்பானம் குடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.