5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

Today Weather: தமிழகத்தில் கோடை வெயில் குறைந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மற்றும கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!
வானிலை நிலவரம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 Jul 2024 09:31 AM

காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கோடை வெயில் குறைந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மற்றும கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் பகுதியில் 19ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மின் கட்டணம் உயர்வு.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு அதிகம்.. முழு விவரம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16.07.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடதமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.07.2024 மற்றும் 18.07.2024 : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.07.2024: மன்னார் வளைகுடா , தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: ஒரு கோடி வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை.. லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?

Latest News