வாடகைக்கு கார் தேவை என கூறி 57 பேரிடம் கார் மோசடி செய்த நபர்.. திருவள்ளூரில் பரபரப்பு.. – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

வாடகைக்கு கார் தேவை என கூறி 57 பேரிடம் கார் மோசடி செய்த நபர்.. திருவள்ளூரில் பரபரப்பு..

Updated On: 

01 Jul 2024 17:49 PM

Car Scamming: மார்ச் 23 ந் தேதி அன்று மணிகண்டன் காரை மாத வாடகைக்கு பெற்று காருக்கான மாத வாடகை பணம் தராமலும் காரை திருப்பித் தராமலும் மனோஜ் பிரபாகர், திவாகர் இருவர் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காரை மீட்டி தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மனோஜ் பிரபாகர் திவாகர் தேசாய் தலைமறைவாக இருந்ததால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

வாடகைக்கு கார் தேவை என கூறி 57 பேரிடம் கார் மோசடி செய்த நபர்.. திருவள்ளூரில் பரபரப்பு..

கோப்பு புகைப்படம்

Follow Us On

57 பேரிடம் கார் மோசடி செய்த நபர் கைது: ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கார் வாடகை வேண்டுமென விளம்பரம் செய்து 57 நபர்களிடமிருந்து கார் பெற்று மோசடி செய்து தலைமுறைவாக இருந்து வந்த நபரை திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவரிடம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் (30) மற்றும் அவருடைய நண்பரான மப்பேடு கீழ்ச்சேரி பகுதியில் வசித்த திருச்சியை சேர்ந்த திவாகர் தேசாய் இருவரும் சேர்ந்து மணிகண்டன் என்பவரிடம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும்
கொரியா நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கார் வாடகை தேவைப்படுவதாகவும் கார் வாடகை கொடுத்தால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக அவரிடம் ஆசையை தூண்டி உள்ளனர.

இதை நம்பிய மணிகண்டன் கடந்த ஜனவரி மாதம் 11 ந் தேதி தனது ஹூன்டாய் I20 காரை மாத வாடகைக்கு அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் காருக்கான முதல் மாதத்துக்கான வாடகை பணம் மட்டும் மணிகண்டனுக்கு அவர்கள் அளித்துள்ளனர். பின்னர் அடுத்தடுத்த மாதத்திற்கு அவருக்கான வாடகை பணம் கொடுக்காமல் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி வந்துள்ளனர். பின்னர் அவர் வாகனத்தை திரும்ப கொடுக்காமல் காரை மற்றோருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த மார்ச் 23 ந் தேதி அன்று மணிகண்டன் காரை மாத வாடகைக்கு பெற்று காருக்கான மாத வாடகை பணம் தராமலும் காரை திருப்பித் தராமலும் மனோஜ் பிரபாகர், திவாகர் இருவர் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காரை மீட்டி தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மனோஜ் பிரபாகர் திவாகர் தேசாய் தலைமறைவாக இருந்ததால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மணவாளநகர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் குற்றவாளியான மனோஜ் பிரபாகர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் இதேபோல் தமிழகத்தின் பிற பகுதியைச் சேர்ந்த 57 நபர்களின் புத்தம் புதிய கார்களை அதை ஆசையை தூண்டி கார்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அதில் சில பேரிடம் கார் ஒப்பந்தம் போட்டும் சிலரிடம் ஒப்பந்தம் போடாமல் கார் எடுத்துள்ளனர்.
கார்களை பெற்று கொண்டு மாத வாடகை பணம் தராமலும் காரை திருப்பி கொடுக்காமலும் அவர்களின் கார்களை மற்றொருவருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி மனோஜ் பிரபாகரன் எடுத்து வந்த ரூ.2.53 கோடி மதிப்புள்ள 26 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து மனோஜ் பிரபாகர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான திவாகர் தேசாய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் 31 கார்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்..

Exit mobile version