Crime: நாமக்கலில் கருக்கலைப்பு செய்ய முயன்ற பள்ளி மாணவி உயிரிழப்பு.. காதலன் கைது!
புதுச்சத்திரம் நவனி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற நபருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அரவிந்த் அதே பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இப்படியான நிலையில் இளைஞர் அரவிந்த்துடன் மாணவி கொண்டிருந்த காதல் நாளடைவில் எல்லை மீறியுள்ளது. இதன் விளைவாக 12 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வயிற்றில் சிசு வளர்வதை உணர்ந்த மாணவி அதிர்ச்சியடைந்து அரவிந்திடம் விஷயத்தை கூறியுள்ளார்.
மாணவி உயிரிழப்பு: நாமக்கல் அருகே கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பருத்திப்பள்ளி என்ற பகுதி உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளி ஒருவர் தனது மனைவி, 2 மகன்கள், மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். 17 வயதான மகள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடைய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவி திடீரென பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.
அதேசமயம் புதுச்சத்திரம் நவனி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற நபருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அரவிந்த் அதே பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இப்படியான நிலையில் இளைஞர் அரவிந்த்துடன் மாணவி கொண்டிருந்த காதல் நாளடைவில் எல்லை மீறியுள்ளது. இதன் விளைவாக 12 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வயிற்றில் சிசு வளர்வதை உணர்ந்த மாணவி அதிர்ச்சியடைந்து அரவிந்திடம் விஷயத்தை கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து கருவை கலைக்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
Also Read: Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
இப்படியான நிலையில் கருவை கலைப்பதற்கான மாத்திரையை அம்மாணவி மருந்து கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாணவியை சிகிச்சைக்காக மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சையளித்தும் அது பலனளிக்கமால் மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவியின் காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் அரவிந்த் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பாப்பநாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு முத்துக்குமரன் என்ற நபர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பள்ளியில் படிக்கும் சில மாணவிகளின் பெற்றோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தொலைபேசி மூலம் முத்துக்குமரன் அளித்த பாலியல் தொல்லை குறித்து தகவல் கொடுத்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் முத்துக்குமரன் 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் முத்துக்குமரன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் ஆனால் அவர் மீது கல்வி துறை சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குழந்தை பாதுகாப்பு நல அலுவலர், ஆசிரியர் முத்துக்குமரன் மீது ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துக்குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.