Tirunelveli: பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!
Crime News in Tirunelveli: நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே இன்று வழக்கம்போல பள்ளி செயல்பட்டு வந்தது. அதேசமயம் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் இன்று காலை அரிவாளுடன் பள்ளிக்கு வந்துள்ளான். இந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் அரிவாளுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே இன்று வழக்கம்போல பள்ளி செயல்பட்டு வந்தது. அதேசமயம் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் இன்று காலை அரிவாளுடன் பள்ளிக்கு வந்துள்ளான். இந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் எதைச்சையாக மாணவனின் பையை சோதனை செய்துள்ளார். அப்போது உள்ளே அரிவாள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையும் படிங்க: Apple iPhone : இதுவரை இல்லாத அளவு குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள்.. முழு விவரம் இதோ!
உடனடியாக இது குறித்து என்னவென்று மாணவனிடம் விசாரித்துள்ளார். ஆனால் மாணவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே உடனடியாக தாழையூத்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அரிவாளைக் கைப்பற்றி அதனை கொண்டு வந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சக மாணவனுடன் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் இம்மாணவன் கடும் கோபத்தில் இருந்துள்ளான். அந்த மாணவனை தாக்குவதற்காக அரிவாள் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பின் அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 பேர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியில் இருந்து அனைத்து மாணவர்களின் பைகளிலும் சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
பள்ளி மாணவர்களுடைய சமீப காலமாக ஆயுத கலாச்சாரம் அதிகரித்து வருவது பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான மருத்துவ சிகிச்சை தேவை என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். படிக்கும் வயதில் இது போன்ற பழி வாங்குதல், சண்டையிடுதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், போதைப் பொருள்களை பயன்படுத்துதல் என பழக்கங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் பள்ளி மாணவர்கள் மீது வைக்கப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நல்லறத்தை போதித்து அவர்கள் நல்ல நிலைமைக்கு வருவதற்கு உதவ வேண்டும். இது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க:”அதிர்ச்சி.. எனக்கு தெரியாமல் நடந்தது”.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு
ஆசிரியர் பாலியல் தொல்லை – ஆசிரியர் டிஸ்மிஸ்
நெல்லையில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி பிரபல மேல்நிலைப்பள்ளி ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் பல ஆண்டுகள் அரசு உதவிப்பெறும் தூய யோவான் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் ரீதியிலான சீண்டல்கள் அளித்ததாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
Also Read: 3D Art Bus stop: சென்னையில் 3டி பஸ் ஸ்டாப்.. 81 இடங்களில் பொருத்த திட்டம்.. இவ்வளவு வசதிகளா?
மேலும் இதே புகாரில் சிக்கிய மற்றொரு நிரந்தர ஆசிரியர் நெல்சனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் பெருமை வாய்ந்ததோடு இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே இவ்வாறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது, “இதுகுறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை ஆகியவை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் நெல்லையில் பேசுபொருளாக மாறியுள்ளது.