சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.. வரலாற்று உள்ளீடுகள் புரியும் என அராய்ச்சியாளர்கள் கருத்து!
Inscription | பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வு முறையையும் கண்டுபிடிக்கும் விதமாக தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அழகாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், பானைகள் மற்றும் தங்க நாணயங்கள் என அதியசமாக பல பொருட்கள் கிடைத்து வருகின்றன.
சோழர் கால கலவெட்டு : பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வு முறையையும் கண்டுபிடிக்கும் விதமாக தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அழகாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், பானைகள் மற்றும் தங்க நாணயங்கள் என அதியசமாக பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், கீழ்வேலூர் என்னும் பகுதியில் சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சியில் இறங்கிய 4 பேர் கொண்ட குழு
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்த கீழ்வேலூர் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வரலாற்று ஆசிரியரும் தமிழ் பண்டிதருமான மணிமாறன், அரசுப் பள்ளி ஆசிரியர் கண்ணன் மற்றும் ஓய்வுபெற்ற டிஆர்ஓஎஸ் முகமது ஆரிப் ஆகியோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிபிஐ-க்கு மாற்றப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு.. நாடு முழுவது மருத்துவர்கள் தொடர் போராட்டம்!
அப்போது சோழர் காலத்தில் பயன்படுத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. தகவலின் படி, திருத்துறை பூண்டியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 4 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. அப்போது அவர்கள் சோழர் காலத்தில் சிறப்பாக இயங்கிய பழமை வாய்ந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அந்த கோயிலின் கட்டட கலை மற்றும் சிற்பங்கள் சோழர் காலத்தை சேர்ந்ததாக இருந்துள்ளது. அதற்கு பிறகு வந்த நாயக்கர்களும், பாண்டியர்களும் கோயிலை புனரமைத்துள்ளனர்.
பண்டைய மன்னரிகளின் பெயர்களை குறிக்கும் கல்வெட்டுகள்
அகழாய்வு மேற்கொண்ட குழுவினர் செம்மலை நாதர் கோயில் கருவறைக்குச் சென்ற போது, முதலாம் ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் கூடிய பல கல்வெட்டுகளை கண்டுள்ளனர். கோயிலின் வெளிப்புறச் சுவரில் இரண்டாம் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் பராக்கிரம பாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகள் ராஜ ராஜ சோழ வளநாடு, ஆலநாட்டு பிரம்மதோஷம் மற்றும் ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் போன்ற பண்டைய மன்னர்களின் பெயர்களை குறிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : Arshad Nadeem: தங்கம் வென்ற நதீமுக்கு இப்படி ஒரு பரிசா..? எருமையை கொடுத்து அசத்திய மாமனார்!
கல்வெட்டுகள் மூலம் வரலாற்று உள்ளீடுகள் புரியவரும் – மணி மாறன்
கல்வெட்டை படிப்பதன் மூலம், பல வரலாற்று உள்ளீடுகள் புரியும் என்று அகழாய்வு குழுவில் இடம்பெற்றிருந்த மணி மாறன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.