5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தூத்துக்குடியில் ஆளில்லா கிராமம்… இருந்த ஒரேயொரு முதியவரும் இறந்ததால் காலியான ஊர்!

மொத்த கிராமமும் காலி செய்து வெளியே செல்லும்போதும், 20 வருடங்களுக்கு முன்னறே மனைவியை இழந்த கந்தசாமி நாயக்கர் மட்டும் தான் பிறந்து வளர்ந்த அதே கிராமத்தில் வசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இவருக்கு  இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

தூத்துக்குடியில் ஆளில்லா கிராமம்… இருந்த ஒரேயொரு முதியவரும் இறந்ததால் காலியான ஊர்!
கந்தசாமி நாயக்கர்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 31 May 2024 13:41 PM

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். அந்த கிராமத்தில் வசித்த கடைசி குடிமகன் 73 வயதான கந்தசாமி நாயக்கர் உயிரிழந்த பிறகு மனிதர்கள் இல்லாத பேய் கிராமமாக மாறியது மீனாட்சிபுரம். ஒரு காலத்தில் 1.296 குடும்பங்கள் வசிக்கும் கிராமமாக அது இருந்தது. சுற்றுச்சூழல் மாற்றங்கள், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடுமையான வறட்சி ஆகியவற்றை எதிர்கொண்டது அந்த கிராமம். இது அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்ற காரணமாக இருந்தது. தனது மனைவியை 20 வருடங்களுக்கு முன்னறே இழந்த  கந்தசாமி நாயக்கர் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது பிறந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஊரே காலி செய்த பிறகும் தனி ஆளாக அந்த கிராமத்தில் வசித்து வந்தார். வயது முதிர்ந்து மற்றொருவரின் உதவி தேவைப்படும் போது அவர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறவில்லை. தனது உயிர் இந்த கிராமத்தில் தான் போகவேண்டும் என்று பிடிவாதமாக அங்கேயே இருந்துவிட்டார்.

73 வயதான கந்தசாமி நாயக்கர் மீனாட்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கடைசி மூச்சை இழுத்தபோது, ​​அது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தின் கடைசி மூச்சாக இருந்தது என்பதை அவர் உணர்ந்திருப்பார். கந்தசாமி நாயக்கர், தனிமையில் வசித்து வந்தவர் என்றாலும் ஒரு காலத்தில் செழித்து இருந்த கிராமத்தின் அடையாளமாக இருந்தார். இப்போது அது மனிதர்கள் அற்ற ஒரு பேய் கிராமமாக மாறியுள்ளது.

செக்காரக்குடி ஊராட்சியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.296 நபர்கள் வாழ்த்துள்ளனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் மாற்றங்கள், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கொடிய வறட்சி ஆகியவை கடந்த பத்தாண்டுகளில் வெகுஜன மக்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. ஒரு காலத்தில் வளமான வயல்வெளிகள் இருந்தவை தரிசு நிலமாக மாறியது. மக்கள் குடும்பம் குடும்மாக வேறு இடங்களில் வாழ்வதற்காக சென்றுவிட்டனர்.

Also read… School Leave : பள்ளிகளுக்கு ஜூன் 8 வரை விடுமுறை.. வெயில் காரணமாக பீகார் அரசு உத்தரவு

இப்படி மொத்த கிராமமும் காலி செய்து வெளியே செல்லும்போதும், 20 வருடங்களுக்கு முன்னறே மனைவியை இழந்த கந்தசாமி நாயக்கர் மட்டும் தான் பிறந்து வளர்ந்த அதே கிராமத்தில் வசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இவருக்கு  இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இளைய மகன் பால கிருஷ்ணன் பேசுகையில் “மீனாட்சிபுரம் கிராமம் விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்தது, மழையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் கிராமத்தின் நிலைமை மோசமடையத் தொடங்கியது. தண்ணீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளைப் பெற மக்கள் 3 – 4 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது, இதனால் கிராமத்தில் தங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் கந்தசாமி நாயக்கருக்கு தனது சொந்த கிராமத்தில் இருக்கும் போதே தனது உயிர் பிரிய வேண்டும் என்பது கடைசி ஆசையாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே தனது இறுதி நாட்களிலும் தனக்கு தேவையான அனைத்து விசயங்களையே தானாகவே செய்து வந்துள்ளார். இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் மகன் பால கிருஷ்ணன் தனது தந்தையை பார்ப்பதற்காக ஒரு நபரை ஏற்பாடு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை கந்தசாமியை சோதித்த அந்த நபர் அவர் உயிரிழந்ததை அறித்துள்ளார். தற்போது 73 வயதான கந்தசாமி நாயக்கர் உயிரிழந்த பிறகு மனிதர்கள் இல்லாத பேய் கிராமமாக மாறியது மீனாட்சிபுரம்.

Latest News