5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. குற்றவாளி சரண்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் பொழுது ஆனந்த் என்பவர் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

Crime: ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. குற்றவாளி சரண்..
வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Nov 2024 18:40 PM

ஓசூரில் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய ஆனந்த் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் பொழுது ஆனந்த் என்பவர் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். பட்டப்பகலில் இந்த சம்பவம் நிக்ழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டுக்காயங்களுடன் துடிதுடித்துக்கொண்டு இருந்த இளம் வழக்கறிஞரை அங்கிருந்த மக்கள் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதனால் தாலுக்கா அலுவலகம் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மதுரையில் கனிம சுரங்கம்.. வலுக்கும் கண்டனங்களும், அரசு சொன்ன விளக்கமும்..

முதல் கட்ட விசாரணையில் வழக்கறிஞர் கண்ணனை வெட்டியது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்த ஆனந்தன் என்பதும், இவரது மனைவியும் வழக்கறிஞராக பணி செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் கண்ணன், ஆனந்த் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read: அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்!

ஆனந்தின் மனைவியும் ஓசூரில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும் ஏற்கனவே முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ் பி தங்கதுரை சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளை திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்ட விரோதத்தை நாம் காண முடியாது” என தெரிவித்துள்ளார்.

Latest News