த.வெ.க கட்சியில் இணைவது எப்போது? ஆதவ் ஆர்ஜுனா பரபரப்பு விளக்கம்!
தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைய உள்ளிர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆதவ் ஆர்ஜுனா பதில் அளித்துள்ளளார். விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா நேற்று ராஜினாமா செய்த நிலையில், இன்று பதிலளித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் ஆர்ஜுனா இணைவதாக சில நாட்களாக தகவல் வெளியாகி வரும் சூழலில், இதற்கு அவரே பதில் அளித்துள்ளார். விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா நேற்று ராஜினாமா செய்த நிலையில், இன்று பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அனைத்து கொள்கை தலைவர்களும் கூறி வருகின்றனர். அதை சொன்னதற்காக தான் எனக்கு தண்டனை கிடைத்ததாக பார்க்கிறேன். திருமாளவன் என்னை விமர்சிப்பதை நான் அறிவுரையாக தான் பார்க்கிறேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். அவர் எனக்கு எப்போது ஒரு ஆசிரியர்.
த.வெ.க கட்சியில் இணைவது எப்போது?
ஆசான். கொள்கை சார்ந்து அவருடன் எனது பயணம் இருக்கும்” என்றார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, “எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். எதிர்கால திட்டம் குறித்து விரையில் அறிவிப்பேன்” என்றார்.
அண்மையில் சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விசிக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோல் கலந்து கொண்டனர். முன்னதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை.
விஜய்யுடன் ஒரே மேடையில் கலந்து கொள்வது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்து என்பதற்காக அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.
Also Read : கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை.. மீட்டது எப்படி? திக்திக் வீடியோ!
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
அதாவது, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாகவும், 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஊழல் குறித்து திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு திமுக அமைச்சர்களுக்கு எதிர்வினையாற்றினர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார். இதனை அடுத்து, நேற்று விசிகவில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவித்து கொள்ளவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
Also Read : முன்னாள் காதலியை தாக்கிய இளைஞர்.. பிரேக் அப் சொன்னதால் ஆத்திரம்.. சென்னையில் அதிர்ச்சி!
இவரது முடிவுக்கு பதில் அளித்த திருமாவளவன், “பொது வாழ்வில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் மிக மிக முக்கியம். ஆதவ் அர்ஜுனா தற்போது எடுத்துள்ள முடிவும் அவசரமான முடிவு தான். ஒரு அமைப்பினுடைய நடைமுறைகள் குறித்து அவருக்கு புரிதல் தேவை. விசிகவில் மீண்டும் அந்த வாய்ப்பை பெறுவார் என்று நினைத்தேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் எப்போதும் உண்டு” என்று கூறியிருந்தார்.