Police viral video: டிக்கெட் எடுக்க மறுத்த காவலர் மீது நடவடிக்கை.. போக்குவரத்து துறை உத்தரவு..!
Transport Corporation: அரசுப்பேருந்து ஒன்றில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து பேருந்தில் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ள நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் செட்டிக்குளம் பேருந்து பணிமணையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டி தான் காவலர் சீருடையில் அணிந்து இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் காவலர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துடன் டிக்கெட் எடுக்குமாறு கேட்டபோது, அரசுப்பேருந்தில் அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். அப்படி எல்லாம் ரூல்ஸ் எதுவும் இல்லை என்று தொடர்ந்து நடத்துனர் காவலரை டிக்கெட் எடுக்க வற்புறுத்தியுள்ளார். மேலும், நாங்களும் அரசு ஊழியர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் தேவையில்லை என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியுள்ளது. காவலரும் விடாப்பிடியாக தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், நடத்துனர் காவலை டிக்கெட் எடுத்து பயணம் செய்யுங்க என நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். நானும் அரசு வேலைக்கு தான் போகிறேன். உங்கள் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவசம், எங்களுக்கு இல்லையா என்று தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார்.
Also Read: சென்னையில் அடுத்த பிரம்மாண்டம்.. சூப்பராக வரப்போகும் பிராட்வே பஸ் நிலையம்!
இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில், சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. இந்த நிலையில், நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: புனே சொகுசு கார் விபத்தில் நடந்தது என்ன? 2 பேரை பலி வாங்கிய சம்பவத்தின் பின்னணி!