5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

” நாங்கள் சமத்துவத்துடன் நிற்கிறோம்” – பவன் கல்யாணை விமர்சித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்..

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “ கம்பீரமாக மேடையில் பேச பயமா இருக்கிறது ஏனென்றால் எனது குரல் அரசியல் குரல் இல்லை. கலைஞனின் குரல். அப்படி பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. கலைஞர் இருந்தவரை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் நிம்மதியாக இருந்தோம் நமக்காக பேச ஒருத்தர் இருந்தாரு. அப்பேர்ப்பட்ட குரலோட தொடர்ச்சி தான் சிவா சார்" என தெரிவித்துள்ளார்.

” நாங்கள் சமத்துவத்துடன் நிற்கிறோம்” – பவன் கல்யாணை விமர்சித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்..
புத்தக வெளியீட்டு விழா
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 06 Oct 2024 10:05 AM

சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருச்சி சிவா எம் பி எழுதிய முரசொலியின் மடியில் தவழ்ந்தவை”, “மேடையெனும் வசீகரம்”, “கேளுங்கள் சொல்கிறேன்”, “எதிர்பாராத திருப்பம்”, “காட்சியும் கருத்தும்” ஆகிய நூல்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “ கம்பீரமாக மேடையில் பேச பயமா இருக்கிறது ஏனென்றால் எனது குரல் அரசியல் குரல் இல்லை. கலைஞனின் குரல். அப்படி பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. கலைஞர் இருந்தவரை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் நிம்மதியாக இருந்தோம் நமக்காக பேச ஒருத்தர் இருந்தாரு. அப்பேர்ப்பட்ட குரலோட தொடர்ச்சி தான் சிவா சார்.

நம்மிடம் ஒரு DEPUTY CM உள்ளார். சமத்துவம் குறித்து பேசுகிறார். இன்னொரு DEPUTY CM உள்ளார். அவர் சக்காரத்தில் ஒன்று பேசுகிறார். நாங்கள் சமத்துவத்துடன் உள்ளோம். ஒருவர் சொன்னார் ரொம்ப தைரியமா பேசுகிறீர்கள் என்றார் உண்மைய சொல்றதுக்கு தயிரியம் தேவையில்லை பொய் சொல்றது தானே தெரியாம் இருக்கணும்.

மேலும் படிக்க: மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி.. எங்கே ? எப்படி பார்ப்பது? ஏற்பாடுகள் தீவிரம்..

பேருந்தில் திருடர்கள் ஜாக்கிரதை என பலகை வைக்கிறோம். அது திருடர்களுக்கு வலிக்கும். என்னுடைய மொழியை வந்து திருடாதே என்னுடைய அடையாளமான என்னுடைய தனித்துவத்தை திருடாதே என்னை காத்துட்டு இருக்குற என் மானிடத்த திருடாதே என்று பலகை வைக்கிறோம். இது அந்த திருடனுக்கு வலிக்குது. வலிக்கட்டும் பரவாயில்ல அப்பேர்ப்பட்ட குரல்களோடு இங்க வருவதும் இந்த நிகழ்ச்சியில நான் நிற்கிறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “ உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒவ்வொரு செங்கல்லால் கட்டப்பட்டது. அல்ல உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒரே செங்கலில் கட்டப்பட்டது, அதுவும் மத்திய அரசின் செங்கலால் கட்டப்பட்டது. அவர் அரசியலிலும், பொது வாழ்விலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில், திட்டத்திற்கான நிதி ஒதுக்கவில்லை என்று சொன்னார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள், நமது முதலமைச்சருக்கு தெரியும் எங்கே தட்ட வேண்டும் எப்படி தட்ட வேண்டும் என்று, அதுபோன்று தற்போது நிதியை அள்ளிக் கொண்டு வந்துள்ளார், அதற்காக மத்திய அரசுக்கும் நன்றி, முதலமைச்சருக்கும் நன்றி.

மேலும் படிக்க: ”சிறைச்சாலை எனும் பல்க்லைக்கழகத்தில் படித்தவர்கள்.. எந்த அரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் ஸ்டாலின்..

திமுகவினர் பிரிவினைவாதி என்று நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தை பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன், வ உ சி பற்றி நமக்கு நன்றாக தெரியும், மிகப்பெரிய தியாகி, அவருக்கு அங்கு சிலை வைக்க வேண்டும் என்று கேட்கும் போது, அங்கு ஒரு எம்.பி கேட்கிறார், அவர் ஒரு வியாபாரி என்று, இவர்கள் மத்தியில் நீங்கள் எப்படி போய் பேசுகிறீர்கள், அந்த இடத்தில் 100 சிவா வேண்டும்.

பிரிவினை என்பது வேறு, தனித்துவம் என்பது வேறு என்று எடுத்துக் கூறியவர் சிவா, திருச்சி சிவாவின் சபையில் நான் ரசித்தது ஒன்று உள்ளது, நாடாளுமன்றத்தில் பேசுகிறார் பல தமிழர்கள் சாதனைப் படைத்துள்ளார்கள் என்று , அதுவும் தமிழ் ஆங்கிலம் படித்துவிட்டு சாதனை படைத்துள்ளார்கள் அவர்களுக்கு இந்தி தெரியாது என்று பேசி இருக்கிறார்,

தந்தை என்பவன் ஒரு குழந்தைக்கு நம்பிக்கை, நல்லவேளை நீங்கள் ஐஏஎஸ் ஆகவில்லை, ஐஏஎஸ் ஆகியிருந்தால் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் இருந்திருக்க நேரிடும், கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான்” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Latest News