அரசியல் அனுபவத்தை பகிர்ந்த ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்!
Rajinikanth : சென்னை வானகரத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையின்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, விழாவில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினி பேச்சு கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
சென்னை வானகரத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையின்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, விழாவில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினி பேச்சு கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா இன்று நடந்தது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த விழா நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அரசியல் அனுபவத்தை பகிர்ந்த ரஜினி
இங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகியோரின் உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜானகி அம்மாளின் முழு உருவப் படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு மலரை வெளியிட, எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயக்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒளிபரபப்பட்டது. அதில் ஜானகி அம்மாளுடனான தினது திரை பயணங்கள் குறித்தும், அரசியல் வாழ்க்கை குறித்தும் பகிர்ந்து கொண்டார் ரஜினி.
அவர் பேசுகையில், ”இரட்டை இலை சின்னம் அதிமுகவின் பிரம்மாஸ்திரம். அந்த இரட்டை இலை கிடைப்பதற்கு ஜானகி அம்மாள் மிகப்பெரிய தியாகம் செய்தார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தில் நின்று போட்டியிட்டு ஜானகி தோல்வி அடைந்தார். அந்த சமயத்தில் ஜானகி நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியபோது எனக்கு பலரும் ஆலோசனை கொடுத்தார்கள். அந்த நேரத்தில் நான் பலரையும் சந்தித்தேன். அனைவருக்கு எனக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்கள். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டால் அவ்வளவு தான்.
பலரின் ஆலோசனைகளை கேட்டால் நமது நிம்மதி, பணம் என அனைத்தையுமே இழந்திர வேண்டியது தான். எல்லாரும் ஒரு ஒரு கருத்தை சொல்லுறாங்க. அது தெரிந்து சொல்கிறார்களா.. தெரியாம சொல்கிறார்களா என ஒன்றும் புரியாது” என்று கூறினார் ரஜினி. இதை கேட்ட எடப்பாடி பழனிசாமி குலுங்கி குலுங்கி சிரித்தார்
மேலும், அவர் பேசுகையில், ”ஒரு சிலர் மட்டும் தான் நான் எடுக்கப்போகும் முடிவால் மற்றவர்கள் சந்தோஷமா என்பதை யோசித்து முடிவு எடுங்க என்று கூறுவார்கள். எடுக்கப்போகும் முடிவால் ஒருவர் மட்டும் சந்தோஷடம் அடைகிறார்களா அல்லது நிறைய பேர் சந்தோஷடம் அடைகிறார்களா என்று யோசித்து முடிவு எடுங்கள் என்று சிலர் கூறுவார்கள்.
Also Read : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை
“தைரியமான முடிவை எடுக்க கூடியவர் ஜானகி”
அதுபோல ஜானகி அம்மாள் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காமல் பெரிய முடிவு எடுத்தார். மிகவும் தைரியமான முடிவை எடுக்க கூடியவர் ஜானகி அம்மாள். அவர் ஜெயலலிதாவை அழைத்து எனக்கு அரசியல் வராது.
நீங்கள் தான் இதற்கு சரியானவர் என முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அதிமுக நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி. அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஜெயலலிதா அம்மாயாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம், பக்குவத்தை உணர்த்தியது” என்று ரஜினி கூறினார்.
Also Read : மேம்பாலம் கட்டும் பணி.. மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய வாழ்த்து வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.பொன்னைய வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வாழ்கை வரலாறு, கட்சிப் பணிகள் இணைந்த குறும்படம் திரையிடப்பட்டது.