5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth On TVK Party: ”விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி” தமிழக வெற்றிக் கழக மாநாட்டை புகழ்ந்து தள்ளிய ரஜினி!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த சென்னை போஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு இருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது விஜய்க்கு வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth On TVK Party: ”விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி” தமிழக வெற்றிக் கழக மாநாட்டை புகழ்ந்து தள்ளிய ரஜினி!
ரஜினி – விஜய் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 Oct 2024 11:30 AM

தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த சென்னை போஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு இருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அதில், ”அனைவருக்கும் என்னுடைய தீபாவளர் வாழ்த்துகள். அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”  என்றார்.

”த.வெ.க மாநாடு மிகப்பெரிய வெற்றி”

மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி  எழுப்பினர்.இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார். மேலும், அவரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

நடிகர் விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார்.

Also Read : மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?

இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கேட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அதிரடியாக அறிவித்தார். மேலும், திமுக, பாஜக கட்சிகளை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்தார்.  தமிழக அரசியலில் கொள்கை எதிரி பாஜக என்று குறிப்பிட்டார்.

விஜய்யை வாழ்த்திய ரஜினி

ஆனால் அரசியல் எதிரி திமுக தான் எனக் குறிப்பிட்டார்.  திமுகவினர் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். திமுகவினர், பாஜகவினர்  பார்த்து பாசிக சக்திகள் என்று கூறுவதாக குறிப்பிட்ட அவர்,  நீங்கள் செய்வது பாயாச அரசியலா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று கூறிய விஜய், கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு.

Also Read : மழை அலர்ட்… இன்று பட்டாசு வெடிக்க முடியுமா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றால் விரும்பி வருவோருடன் இணைவேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். விஜய்யின் பேச்சுக்கு ஒவ்வொரு கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பலரும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகில் உச்சப்பட்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவதகா அறிவித்த ரஜினி, அடுத்தடுத்த பல படங்களில் கமிண்ட் ஆகினார்.

அண்ணாத்தா, ஜெயிலர், வேட்டைகள் படங்கள் வெளியானது. தற்போது அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

Latest News