5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay : 85 ஏக்கர் இடம்.. 1.5 லட்சம் தொண்டர்கள்.. விஜய் மாநாட்டுக்கு முழு திட்டம்.. வெளியான புது தகவல்!

TVK Conference | தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அதுமட்டுமன்றி மாநாட்டின் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Actor Vijay : 85 ஏக்கர் இடம்.. 1.5 லட்சம் தொண்டர்கள்.. விஜய் மாநாட்டுக்கு முழு திட்டம்.. வெளியான புது தகவல்!
தவெக தலைவர் விஜய்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 29 Aug 2024 15:56 PM

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அதுமட்டுமன்றி மாநாட்டின் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : National Best Teacher Award 2024 : தேசிய நல்லாசிரியர் விருது.. குக்கிராமத்தில் இருந்து தேர்வான கோபிநாத்.. அப்படி என்ன செய்தார்?

85 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய மாநாடு நடத்த திட்டமிடும் தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விக்கரவஆண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு ஒப்புதல் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். இந்நிலையில், இந்த மாநாடு குறித்து ஊடகத்திடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், இந்த மாநாட்டிற்காக 85 ஏக்கர் இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.5 கோடி மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவையுடன் கூடிய மருத்துவ வசதி

தொடர்ந்து பேசிய அவர், எவ்வளவு கூட்டம் வந்தாலும் சமாளிக்கும் வகையில் மிக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, மாநாட்டில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு பார்கிங் வசதி, உணவு, குடிநீர், கழிவறை மற்றும் மருத்துவ சேவை உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவ சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் அனைத்தும் நடவடிக்கைகளிலும் கட்சி ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டர்கள் மத்தியில் கட்சி கொடியை அறிமுகம் செய்த விஜய்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கடந்த ஆக்ஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். அந்த நாளுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கொடி அறிமுக நாள் கொண்டாட்டமாக அமைந்தது. அதன்படி, புதிய கட்சி கொடியை சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழக கட்சி அலுவலகத்தில் ஏற்றி தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிர்வாகிகள் முன்னிலையில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப் பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சிக் ககாடியை அறிமுகம் செய்து வைத்ததுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைத்தார்.  சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த பின்னணியில் இரு பக்கமும் யானைகள் ஆர்ப்பரிக்க நடுவில் வாகை மலருடன் கூடிய கொடியானது அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 ஆம் தேதி வரை பொளக்கப்போகும் மழை..

இந்த நிகழ்வு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி நிலையில், தாவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ழ்சியை ஏற்படுத்தியது. கட்சி கொடியை அறிமுகம் செய்த அடுத்த சில நாட்களிலேயே மாநாடு குறித்து வெளியான தகவல் அரசியல் கலத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News